கோபிசெட்டிபாளையம்: கிணற்றுக்குள் விழுந்த மயில் பத்திரமாக மீட்பு
டி.என்.பாளையத்தில் கிணற்றுக்குள் தவறி விழுந்த மயிலை, வனத்துறையினர் பத்திரமாக மீட்டனர்.
ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையம் அடுத்த டி.என்பாளையம் அருகே உள்ள கொங்கர்பாளையத்தில் விவசாயி ஒருவரின் கிணற்றில் மயில் ஒன்று தவறி, விழுந்தது. இது குறித்து, வனத்துறையினருக்கு தகவல் கிடைத்தது.
தகவலின்பேரில் டி.என்.பாளையம் வனத்துறையினர் அங்கு சென்று, கிணற்றுக்குள் தவறி விழுந்த மயிலை பத்திரமாக மீட்டனர். பின்னர், மயிலானது வனப்பகுதியில் விடப்பட்டது.