ஈவிகேஎஸ் இளங்கோவன் மறைவு: ஈரோட்டில் அனைத்துக் கட்சியினர் அமைதி ஊர்வலம்
ஈவிகேஎஸ் இளங்கோவன் மறைவையொட்டி, ஈரோட்டில் அனைத்துக் கட்சியினர் அமைதி ஊர்வலம் சென்றனர்.
ஈவிகேஎஸ் இளங்கோவன் மறைவையொட்டி, ஈரோட்டில் அனைத்துக் கட்சியினர் அமைதி ஊர்வலம் சென்றனர்.
காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரும், ஈரோடு கிழக்குத் தொகுதி எம்எல்ஏவுமான ஈவிகேஎஸ் இளங்கோவன் நேற்று முன்தினம் (டிச.14) சென்னையில் காலமானார்.
அவருக்கு அஞ்சலி செலுத்தும் வகையில், ஈரோட்டில் நேற்று (டிச.15) பல்வேறு கட்சியின் சார்பில் அமைதி ஊர்வலம் நடந்தது. ஈரோடு அரசு தலைமை மருத்துவமனை ரவுண்டானா பகு தியில் இருந்து தொடங்கிய ஊர்வலம் மீனாட்சி சுந்தரனார் சாலை வழியாக பன்னீர்செல்வம் பூங்காவில் நிறைவுபெற்றது.
அதைத்தொடர்ந்து, அங்கு அலங்கரித்து வைக்கப்பட்டு இருந்த ஈவிகேஎஸ் இளங்கோவன் உருவப்படத்துக்கு, பல்வேறு அரசியல் கட்சியினர் மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தினர். இதில், திமுக, காங்கிரஸ், தேமுதிக உள்ளிட்ட பல்வேறு கட்சியினர் 300க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர்.