ஆப்பக்கூடல் ஸ்ரீ கணேச பால தண்டாயுதபாணி சுவாமி கோவிலில் பங்குனி உத்திரத் திருவிழா

பவானி அடுத்த ஆப்பக்கூடல் ஸ்ரீ கணேச பால தண்டாயுதபாணி சுவாமி திருக்கோவிலில் இன்று பங்குனி உத்திரத் திருவிழா நடைபெற்றது.

Update: 2022-03-18 09:45 GMT

பங்குனி உத்திரத் திருவிழாவையொட்டி, ஆப்பக்கூடல் ஸ்ரீ கணேச பால தண்டாயுதபாணி சுவாமி கோவிலில் வரிசையில் நின்று சுவாமி தரிசனம் செய்த பக்தர்களை படத்தில் காணலாம்.

ஈரோடு மாவட்டம், பவானி அடுத்த ஆப்பக்கூடலில் பால தண்டாயுதபாணி கோவிலில் பங்குனி உத்திர திருவிழா இன்று கொண்டாடப்பட்டது. இதையொட்டி ஏராளமான ஆண் மற்றும் பெண் பக்தர்கள் அங்குள்ள பவானி ஆற்றுக்கு சென்று பால் குடம் மற்றும் தீர்த்தக்குடம் எடுத்து ஊர்வலமாக கோவிலுக்கு வந்தனர்.

ஊர்வலத்தில் ஏராளமான பக்தர்கள் காவடி எடுத்து வந்து தங்களுடைய நேர்த்திக்கடனை செலுத்தினர். ஊர்வலம் கோவிலை வந்தடைந்ததும் முருகனுக்கு சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டது. 

இன்னிசை நிகழ்ச்சி நடைபெற்ற போது எடுத்த படம்

இதைத்தொடர்ந்து பக்தர்களுக்கு சிறப்பு அலங்காரத்தில் முருகன் அருள்பாலித்தார். இதில் அந்தியூர், அத்தாணி, கவுந்தப்பாடி, கீழ்வாணி , கூத்தம்பூண்டி, பெருந்தலையூர், ஜம்பை, வேம்பத்தி, வெள்ளாளபாளையம் உள்பட பல்வேறு பகுதிகளில் இருந்து பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

இதையொட்டி பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. தொடர்ந்து கோவில் நிர்வாகம் சார்பில், இன்னிசை நிகழ்ச்சி நடைபெற்றது. மேலும், ஆப்பக்கூடல் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.

Tags:    

Similar News