பவானி கூடுதுறை சங்கமேஸ்வரர் கோவில் பங்குனி உத்திர தேர் திருவிழா

ஈரோடு மாவட்டம் பவானி கூடுதுறையில் பங்குனி உத்திரத்தை முன்னிட்டு தேர்த்திருவிழா நடைபெற்றது.

Update: 2022-03-18 10:45 GMT

ஸ்ரீ விசாலாட்சி சமேத காசிவிஸ்வநாதர் தேரை வடம் பிடித்து இழுத்த பக்தர்களை படத்தில் காணலாம்.

ஈரோடு மாவட்டம் பவானி கூடுதுறையில் உள்ள பழைமை வாய்ந்த சங்கமேஸ்வரர் திருக்கோயில் பங்குனி உத்திரத் தேர்திருவிழா இன்று நடைபெற்றது. செயல் அலுவலர் சபிதா தலைமையில் நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் இந்த அறநிலையத்துறையின் அலுவலர்கள் மற்றும் திமுக நிர்வாகிகள் காவல்துறையினர் மற்றும் பக்தர்கள் உள்ளிட்டோர் தேர்ரை வடம் பிடித்து இழுத்தனர்.

தொடர்ந்து உற்சவரான ஸ்ரீ விசாலாட்சி சமேத காசிவிஸ்வநாதர் கொண்ட தேர் பவானி கூடுதுறையில் தொடங்கி ஈரோடு செல்லும் சாலை, பூக்கடை வீதி மற்றும் காவிரி வீதி ஆகிய வீதிகள் வழியாக சென்று கோவிலில் நிறைவடைந்தது. இதற்கு முன்னதாக, தேருக்கு பக்தர்கள் மலர்கள் தூவி வழிபாடு செய்தனர்.

Tags:    

Similar News