பவானியில் வெளிமாநில லாட்டரி சீட்டு விற்றவர் கைது
பவானி வர்ணபுரத்தில் வெளிமாநில லாட்டரி சீட்டு விற்ற ஒருவரை போலீசார் கைது செய்து தப்பி ஓடிய நபரை போலீசார் தேடி வருகின்றனர்;
ஈரோடு மாவட்டம் பவானி வர்ணபுரம் 5-வீதியில் வெளிமாநில லாட்டரி சீட்டு விற்பனை நடைபெறுவதாக வந்த தகவலின் பேரில் பவானி போலீசார் அப்பகுதியில் ரோந்து சென்றனர். அப்போது, அங்கு லாட்டரி சீட்டு விற்பனை செய்து கொண்டிருந்த, அதே பகுதியை சேர்ந்த மணிகண்டன் மற்றும் தினகரன் ஆகியோர் என தெரியவந்தது. இதனையடுத்து, மணிகண்டனை கைது செய்த போலீசார் அவரிடம் இருந்து லாட்டரி சீட்டுகளை பறிமுதல் செய்தனர். மேலும், போலீசாரை கண்டு தப்பி ஓடிய தினகரனை தேடி வருகின்றனர்.