பவானிசாகர் அணையில் இருந்து நாளை (12ம் தேதி) முதல் தண்ணீர் திறக்க உத்தரவு
ஈரோடு மாவட்டம் பவானிசாகர் அணையில் இருந்து அரக்கன் கோட்டை - தடப்பள்ளி வாய்க்கால் பாசனத்திற்கு நாளை (12ம் தேதி) முதல் தண்ணீர் திறக்க உத்தரவிடப்பட்டுள்ளது.
Erode News, Erode Today News, Erode Live Updates - பவானிசாகர் அணையில் இருந்து அரக்கன் கோட்டை - தடப்பள்ளி வாய்க்கால் பாசனத்திற்கு நாளை முதல் தண்ணீர் திறக்க உத்தரவிடப்பட்டுள்ளது.
2024 2025-ஆம் ஆண்டு முதல் போக பாசனத்திற்கு, பவானிசாகர் அணையிலிருந்து, அரக்கன்கோட்டை மற்றும் தடப்பள்ளி வாய்க்கால்களிலுள்ள பாசன நிலங்களுக்கு 12.07.2024 முதல் 08.11.2024 முடிய 120 நாட்களுக்கு தண்ணீர் திறக்க தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.
இதுதொடர்பாக தமிழக அரசின் கூடுதல் தலைமைச் செயலாளர் மணிவாசன் வெளியிட்டுள்ள அரசாணையில் கூறியிருப்பதாவது:-
2024 2025-ஆம் ஆண்டு முதல் போக பாசனத்திற்கு, ஈரோடு மாவட்டம் பவானிசாகர் அணையிலிருந்து அரக்கன்கோட்டை மற்றும் தடப்பள்ளி வாய்க்கால்களிலுள்ள 24504 ஏக்கர் பாசன நிலங்களுக்கு 12.07.2024 முதல் 08.11.2024 வரை 120 நாட்களுக்கு 8812.80 மில்லியன் கன அடிக்கு மிகாமல், அணையின் தற்போதைய நீர் இருப்பு மற்றும் நீர்வரத்தினைப் பொறுத்து, தேவைக்கேற்ப தண்ணீர் திறந்து விட அனுமதி அளித்து அரசு ஆணையிடுகிறது.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.