அந்தியூர் வரட்டுப்பள்ளம் அணையிலிருந்து பாசனத்திற்காக தண்ணீர் திறப்பு

வரட்டுப்பள்ளம் அணையிலிருந்து பாசனத்திற்காக தண்ணீர் திறப்பு. 6000 ஏக்கர் விவசாய நிலங்கள் நேரடியாகவும் மறைமுகமாகவும் பயன்பெறும்.

Update: 2022-03-09 05:15 GMT

அந்தியூர் வரட்டும் பள்ளம் அணையிலிருந்து புதிய ஆயக்கட்டு பாசனத்திற்கு தண்ணீரை பொதுப்பணித்துறை அதிகாரிகள் திறந்து விட்டபோது எடுத்த படம்.

வரட்டுப்பள்ளம் அணையிலிருந்து பாசனத்திற்காக தண்ணீர் திறப்பு. 6000 ஏக்கர் விவசாய நிலங்கள் நேரடியாகவும் மறைமுகமாகவும் பயன்பெறும்.

ஈரோடு மாவட்டம் அந்தியூர் அருகே உள்ள வரட்டுப்பள்ளம் அணையில் இருந்து புதிய ஆயக்கட்டு பாசனத்திற்கு தண்ணீரை பொதுப்பணித்துறை அதிகாரிகள் மற்றும் விவசாயிகள் இணைந்து திறந்து வைத்தனர். திறந்த விடப்பட்ட தண்ணீர் மதகுகள் வழியே சீறிப்பாய்ந்து வெளியேறியது அப்பபோது விவசாயிகள் மற்றும் அதிகாரிகள் மலர் தூவி வரவேற்றனர். 21 கன அடிக்கு மிகாமல் தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளது. இன்றிலிருந்து திறக்கப்படும் தண்ணீர் ஆனது மொத்தம் 100 நாட்களுக்கு திறந்துவிடப்படுகிறது.

இதன் காரணமாக வரட்டுபள்ளம் அணையின் புதிய ஆயக்கட்டு பகுதிகளான சங்கராபாளையம், எண்ணமங்கலம் மற்றும் மைக்கேல்பாளையம் கிராமங்களில் உள்ள 3000 ஏக்கர் விவசாய நிலங்கள் நேரடியாகவும், மறைமுகமாக 3000 ஏக்கர் விவசாய நிலங்கள் என மொத்தம் 6000 ஏக்கர் விவசாய நிலங்கள் பாசன வசதி பெறுகின்றன. இந்த தண்ணீர் திறப்பை பயன்படுத்தி விவசாயிகள் நிலக்கடலை, மக்காச்சோளம், எள் உள்ளிட்ட மானாவாரி பயிர்களை பயிரிட்டு பயனடைந்து கொள்ளுமாறு பொதுப்பணித்துறை அதிகாரிகள் கேட்டுக் கொண்டுள்ளனர். வரட்டுப்பள்ளம் அணையின் தற்போதைய நீர் மட்டம் 32.47 அடி / 33.46 அடி.நீர் இருப்ப 132.90 மி.கன அடி / 139.60 மி.கன அடி ஆகும்.

Tags:    

Similar News