குண்டேரிப்பள்ளம் அணையில் இருந்து பாசனத்திற்காக தண்ணீர் திறப்பு

ஈரோடு கோபிசெட்டிபாளையம் அருகே குண்டேரிப்பள்ளம் அணையிலிருந்து முதல்போக சாகுபடிக்கு தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளது.

Update: 2022-04-13 11:00 GMT

  பொதுப்பணித்துறை அதிகாரிகள் மலர்தூவி வரவேற்ற போது எடுத்த படம்.

ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையம் அடுத்த டி.என்.பாளையம் அருகே உள்ள கொங்கர்பாளையம் கிராமத்தை ஒட்டி வனப்பகுதியில் அமைந்துள்ளது குண்டேரிப்பள்ளம் அணை. இந்த அணையின் மொத்த நீர்மட்டம் 42 அடி ஆகும். இதைத்தொடர்ந்து அணையில் இருந்து முதல்போக சாகுபடிக்கு தண்ணீர் திறக்க கோரி விவசாயிகள் தமிழக அரசுக்கு கோரிக்கை வைத்தனர்.

அதைத்தொடர்ந்து இன்று காலை அணையில் இருந்து பாசனத்துக்காக தண்ணீர் திறந்துவிடும் நிகழ்ச்சி நடந்தது. அணையில் இருந்து இடது மற்றும் வலது கரை என இரு வாய்க்கால்களிலும் பொதுப்பணித்துறை உதவி செயற்பொறியாளர் திருமூர்த்தி தலைமையில் உதவி பொறியாளர் கல்பனா மற்றும் பொதுப்பணித்துறை அதிகாரிகள் குண்டேரிப்பள்ளம் அணையில் பூஜை செய்து தண்ணீர் திறந்து விட்டனர்.

இன்று முதல் ஜூன் 9-ந் தேதி வரை பாசனத்திற்காக தண்ணீர் வழங்கப்படும் என்றும் முதலில் 12 நாட்களுக்கும், அதைத்தொடர்ந்து 5 நாட்கள் இடைவெளியில் 10 நாட்கள் வீதம் மொத்தம் 57 நாட்களுக்கு தண்ணீர் வழங்கப்படும் என்று பொதுப்பணித்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

Tags:    

Similar News