ஈரோடு எஸ்.பி. அலுவலகத்தில் காவல் உதவி மையம் திறப்பு

காவல்துறையில் புதியதாக சேர விண்ணப்பிபவர்களுக்கு வழிகாட்ட ஈரோடு எஸ்.பி. அலுவலகத்தில் காவல் உதவி மையம் திறக்கப்பட்டுள்ளது.

Update: 2022-07-08 12:15 GMT

ஈரோடு எஸ்.பி. அலுவலகத்தில் திறக்கப்பட்டுள்ள காவல் உதவி மையம்.

தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வு வாரியம் சார்பில் இரண்டாம் நிலை காவலர், இரண்டாம் நிலை சிறை காவலர் மற்றும் தீயணைப்பு துறையில் காலியாக உள்ள 3.552 இடங்களுக்கான தேர்வு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

தேர்வுக்காக பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் மின்னஞ்சல் வழியாக அடுத்த மாதம் 15-ம் தேதிக்குள் www.tnusrb. tn.gov.in என்ற இணையதள முகவரி மூலமாக மட்டுமே அனுப்ப வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது.

விண்ணப்பதாரர்கள், ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கும் போது ஏற்படும் சந்தேகங்களை தீர்க்கும் பொருட்டு, ஈரோடு எஸ்.பி., அலுவலகத்தில் சிறப்பு உதவி மையம் திறக்கப்பட்டுள்ளது.

தினமும் காலை 9.30 மணி முதல் மாலை 6.00 மணி வரை, நேரடியாக தங்களுடைய சந்தேகங்களை கேட்டு தெளிவு பெறலாம். மேலும் ஏதாவது சந்தேகம் இருப்பின் 9655220100 என்ற எண்ணில் தொடர்பு கொண்டு கேட்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags:    

Similar News