பவானியில் 3 பேருந்துகள் மட்டுமே இயக்கம்: மாணவ மாணவிகள் அவதி

ஈரோடு மாவட்டம் பவானி அரசு போக்குவரத்து பணிமனையில் 61 பேருந்துகளில் 3 பேருந்துகள் மட்டுமே இயக்கப்பட்டன.

Update: 2022-03-28 10:15 GMT

பவானி பேருந்து நிலையத்தில் தனியார் பேருந்தில் ஏற அலைமோதிய பயணிகள் கூட்டம்.

அகில இந்திய அளவில் தொழிற்சங்கங்கள் இன்று (28ம் தேதி) மற்றும் நாளை(29ம் தேதி)  ஆகிய இரு தினங்கள் பொது வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டு வருகிறது. முதல் நாளான இன்று,  தமிழகம் முழுவதும் அரசு போக்குவரத்து பணிமனையில் இருந்து பெருமளவிலான அரசு பேருந்துகள் இயக்கப்படவில்லை.

இதன் ஒரு பகுதியாக ஈரோடு மாவட்டத்தில் பவானி அரசு போக்குவரத்து பணிமனையில் இருந்து 61 அரசுப் பேருந்துகளில் 3 பேருந்துகள் மட்டுமே இயக்கப்படுவதால் பவானி பேருந்து நிலையம் பேருந்துகள் இன்றி வெறிச்சோடி காணப்படுகிறது. இதனால் காலை நேரங்களில் வேலைக்கு செல்வோர், பள்ளி, கல்லூரிக்குச் செல்லும் மாணவ, மாணவியர்கள் மற்றும் வெளியூர் பயணம் செல்லும் பயணிகள் ஆகியோர் கடும் அவதி அடைந்துள்ளனர்.

மேலும் விவசாயிகள் தங்கள் உற்பத்தி செய்த காய்கறிகளை சந்தைக்கு கொண்டு செல்வதிலும் சிரமத்தை சந்தித்து  வருகின்றனர். இதையடுத்து தனியார் பேருந்துகளில் கூட்ட நெரிசல் காரணமாக பேருந்து படிக்கட்டில் தொங்கியபடி பொதுமக்கள் பயணம் செய்யும் நிலைமை ஏற்பட்டுள்ளது. 

Tags:    

Similar News