அந்தியூர் அருகே மின் கம்பி அறுந்து விழுந்ததில் ஒருவர் காயம்

அந்தியூர் அருகே இருசக்கர வாகனத்தில் சாலையை கடந்து சென்றவர் மீது மின் கம்பி அறுந்து விழுந்ததில் காயமடைந்தார்.;

Update: 2022-05-07 00:45 GMT

மின்வாரிய ஊழியர்கள் அறுந்து விழுந்த கம்பியை சரிசெய்த போது எடுத்த படம்.

ஈரோடு மாவட்டம் அந்தியூரில் இருந்து இன்று காலை சுமார் எட்டு மணிக்கு, ஜி எஸ் காலனி செல்வதற்காக இருசக்கர வாகனத்தில் ஒருவர் சென்று கொண்டிருந்தார். அப்போது, ஓடைமேடு பிரிவு என்ற இடத்தில் சென்று கொண்டிருந்தபோது அப்பகுதியில் உள்ள மின் கம்பத்தில் இருந்து திடீரென மின்கம்பி அறுந்து இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தவர் மீது விழுந்தது.

மின்கம்பியில் இருந்து மின்சாரம் பாய்ந்ததால் இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தவர் அப்பகுதியில் உள்ள வேலியில் தூக்கி வீசப்பட்டார். இதில் கை மற்றும் கால் பகுதியில் சிராய்ப்பு காயம் ஏற்பட்டு அதிர்ஷ்டவசமாக அந்த நபர் உயிர் தப்பினார். உடனடியாக அப்பகுதியில் இருந்தவர்கள் மின்வாரிய ஊழியர்களுக்கு தகவல் கொடுத்தனர். அப்பகுதிக்கு விரைந்து வந்த மின்வாரிய ஊழியர்கள், அறுந்து விழுந்த கம்பியை சுமார் அரை மணி நேரத்திற்குப் பிறகு சரி செய்தனர். இதனால் அப்பகுதியில் அரை மணி நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

Tags:    

Similar News