அம்மாபேட்டை அருகே 60 கிலோ குட்கா பறிமுதல் தொடர்பாக ஒருவர் கைது

அம்மாபேட்டை அருகே நான்கு சக்கர வாகனத்தில் 60 கிலோ குட்கா மற்றும் புகையிலை பொருட்களை கடத்திய வந்த இளைஞரை போலீசார் கைது செய்தனர்.

Update: 2022-05-31 14:30 GMT

கைது செய்யப்பட்ட சந்தோஷ்.

ஈரோடு மாவட்டத்தில் கஞ்சா, குட்கா, புகையிலை போன்ற போதை பொருட்களுக்கு எதிராக மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சசிமோகன் கடுமையான தொடர் நடவடிக்கைகள் எடுத்து வருகிறார். மேலும், தீவிரமாக கண்காணிக்கவும் உத்தரவிட்டிருந்தார்.இந்நிலையில் இன்று அம்மாபேட்டை காவல் நிலைய ஆய்வாளர் கிருஷ்ணமூர்த்தி அம்மாபேட்டை - அந்தியூர் சாலையில் கொண்டையன்கோட்டை பிரிவு பகுதியில் வாகன சோதனை செய்து கொண்டிருந்தார்.

அப்போது அந்த வழியாக வந்த நான்கு சக்கர வாகனத்தை நிறுத்தி சோதனை செய்தபோது, அந்தியூர் அருகே உள்ள முகாசிபுதூர் பகுதியை சேர்ந்த செல்வராஜ் மகன் சந்தோஷ் ( 30) நான்கு சக்கர வாகனத்தில் சட்டவிரோதமாக குட்கா, புகையிலை பதுக்கி வைத்து பெங்களூரில் இருந்து விற்பனைக்காக கொண்டு வந்தது தெரியவந்தது.

அதன்பின் அவரிடமிருந்த ரூ.1,64,240  மதிப்புள்ள 60 கிலோ குட்கா, புகையிலை பொருட்களை பறிமுதல் செய்தார். இதனையடுத்து, போலீசார் சந்தோஷை கைது செய்தனர். மேலும் மாவட்டத்தில் தொடர்ச்சியாக கஞ்சா, குட்கா, புகையிலை போன்ற போதை பொருட்கள் விற்பனை செய்யும் குற்றவாளிகளை அதிரடியாக  போலீசார்  கைது செய்து வருவது குறிப்பிடத்தக்கது.

Tags:    

Similar News