ஈரோட்டில் ஒரு கிலோ கத்தரிக்காய் ரூ.130-க்கு விற்பனை

காய்கறி வரத்து குறைந்ததால் ஈரோட்டில் ஒரு கிலோ கத்தரிக்காய் ரூ.130-க்கு விற்பனை செய்யப்பட்டது. மற்ற காய்கறிகள் விலையும் அதிகரித்துள்ளது.

Update: 2021-11-30 11:15 GMT

பைல் படம்.

ஈரோடு வ.உ.சி நேதாஜி காய்கறி மார்க்கெட்டில் இதுவரை இல்லாத அளவிற்கு ஒரு கிலோ கத்திரிக்காய் ரூ.130-க்கு விற்பனையானது. இந்த மாத தொடக்கத்தில் ஒரு கிலோ கத்திரிக்காய் ரூ.30-க்கு விற்பனையானது. இந்நிலையில் கிட்டத்தட்ட 100 ரூபாய் உயர்ந்துள்ளது. ஈரோடு மார்க்கெட்டுக்கு தினமும் 8 ஆயிரம் கிலோ தக்காளி வரத்து ஆகும். தற்போது மழை காரணமாக வரத்து குறைந்துள்ளதால் வெறும் 800 கிலோ மட்டுமே வரத்தாகிறது. இதனால் பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். இதேபோல் காய்கறி விலையும் சற்று அதிகரித்துள்ளது.

ஈரோடு வ.உ.சி மார்க்கெட்டில் இன்று விற்பனையான காய்கறிகளின் விலை (1 கிலோ) பின்வருமாறு:

வெண்டைக்காய் - ரூ.75

மிளகா - ரூ‌.80 

முருங்கைக்காய் - ரூ.150 

முள்ளங்கி - ரூ.70 

பீர்க்கங்காய் - ரூ.70 

பாகற்காய் - ரூ.70 

இஞ்சி - ரூ.60 

முட்டைக்கோஸ் - ரூ.35 

கேரட்‌ - ரூ.60 

கருப்பு அவரை - ரூ.120 

புடலங்காய் ரூ.70 

பட்ட அவரை ரூ.90 

சின்ன வெங்காயம் - ரூ.40 

பெரிய வெங்காயம் - ரூ.40

Tags:    

Similar News