கோபிசெட்டிபாளையத்தில் ஜெயலலிதா நினைவு தினம் அனுசரிப்பு
முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் 8வது ஆண்டு நினைவு தினத்தையொட்டி, ஈரோடு மாவட்டம் கோபியில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில் மலர் தூவி நினைவஞ்சலி செலுத்தப்பட்டது.
முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் 8வது ஆண்டு நினைவு தினத்தையொட்டி, கோபியில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில் மலர் தூவி நினைவஞ்சலி செலுத்தப்பட்டது.
முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மறைவுற்ற டிசம்பர் 5 ம் தேதியினை தமிழகம் முழுவதும் உள்ள அதிமுக நிர்வாகிகளும், தொண்டர்களும் அவரது நினைவு நாளாக அனுசரித்து வருகின்றனர். அதன் தொடர்ச்சியாக, ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையம் சட்டமன்ற தொகுதியின் அதிமுக தலைமை அலுவலகத்தில் முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் நினைவேந்தல் நிகழ்ச்சி இன்று (டிச.5) காலை நடைபெற்றது.
கோபி நகர செயலாலர் ப்ரிணியோ கணேஷ் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சத்தியபாமா, ஒன்றிய குழு தலைவர் மௌதீஸ்வரன் உள்ளிட்ட பல்வேறு நிர்வாகிகளும் தொண்டர்களும் கலந்து கொண்டு முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் திருவுருவப் படத்திற்கு மாலை அணிவித்தும் மலர் தூவியும் மரியாதை செலுத்தினர்.
இந்நிகழ்வில், கோபி அதிமுக நகர்மன்ற உறுப்பினர்கள் உள்ளிட்ட நூற்றுக்கும் மேற்பட்ட நிர்வாகிகளும், தொண்டர்கள் பலரும் கலந்து கொண்டனர்.