ஈரோட்டில் இருந்து பல்வேறு அமைப்புகள் சார்பில் ரூ.5 லட்சம் நிவாரண பொருட்கள் அனுப்பி வைப்பு
ஈரோட்டில் இருந்து பல்வேறு அமைப்புகள் சார்பில், பெங்கல் புயல் கனமழையால் பாதித்த மாவட்டங்களுக்கு ரூ.5 லட்சம் மதிப்பிலான நிவாரண பொருட்களை அனுப்பி வைக்கப்பட்டது.
ஈரோட்டில் இருந்து பல்வேறு அமைப்புகள் சார்பில், பெங்கல் புயல் கனமழையால் பாதித்த மாவட்டங்களுக்கு ரூ.5 லட்சம் மதிப்பிலான நிவாரண பொருட்களை அனுப்பி வைக்கப்பட்டது.
பெங்கல் புயல் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட திருவண்ணாமலை, விழுப்புரம், கடலூர் மாவட்ட மக்களுக்கு உதவும் வகையில், ஈடிசியா அறக்கட்டளை, அசோசியேசன் பார் பாலிமர் டிரேடு ஈரோடு, பெருந்துறை பேக்கரி உரிமையாளர்கள் அசோசியேசன், ஈரோடு ரோட்டரி சென்ட்ரல் மற்றும் ஈரோடு மாவட்ட தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு ஆகிய சங்கங்கள் இணைந்து ரூ.5 லட்சம் மதிப்பிலான நிவாரணப் பொருட்களை மாவட்ட ஆட்சியர் ராஜ கோபால் சுன்கரா முன்னிலையில் அனுப்பி வைத்தனர்.
இந்த நிகழ்ச்சியில், ஈடிசியா தலைவர் ஸ்ரீதர், செயலாளர் சுரேஷ், பொருளாளர் சரவணபாபு, முன்னாள் தலைவர்கள் வெங்கடேஸ், திருமூர்த்தி, துணைத் தலைவர்கள் கந்தசாமி, ராம்பிரகாஷ், இணைச் செயலாளர் கார்த்திகேயன், இணைப்பொருளாளர் ஸரத்மனோ மற்றும் ரோட்டரி க்ளப் ஆப் ஈரோடு சென்ட்ரல் முன்னாள் தலைவர் ராமலிங்கம், செயலாளர் செந்தில்குமார், ஈரோடு மாவட்ட தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பின் பொருளாளர் உதயம் ஸ்டோர்ஸ் செல்வம், உணவு பாதுகாப்புத் துறை மாவட்ட நியமன அலுவலர் தங்கவிக்னேஷ் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.