அந்தியூரில் வாக்குப்பதிவு ஜோர்: வீல்சேரில் வந்து மூதாட்டி வாக்களிப்பு

அந்தியூரில் நடக்கமுடியாமல் இருந்த மூதாட்டி, வீல்சேரில் வந்து வாக்காளித்தார்.;

Update: 2022-02-19 04:15 GMT

வீல்சேரில் அமர்ந்தபடியே வாக்காளித்த மூதாட்டி..

தற்போது நகர்புற உள்ளாட்சி தேர்தலுக்கான வாக்குப்பதிவு தமிழகம் முழுவதும் விறுவிறுப்பாக நடைபெறுகிறது. ஈரோடு மாவட்டம் அந்தியூர் பேரூராட்சியில் உள்ள 22 வாக்குச்சாவடி மையங்களிலும் வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது. வாக்குச்சாவடி மையத்தில் நடக்க முயலாமல் உள்ள வாக்காளர்கள் வாக்காளிக்க எதுவாக வீல்சேர் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
அவ்வகையில்,  அந்தியூர் கிழக்கு ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் அமைந்துள்ள வாக்குச்சாவடி மையத்தில், வாக்களிக்க, 76 வயது மூதாட்டி ஒருவர்,  தேர்தல் ஆணையத்தால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த வீல்சேரில் அமர்ந்தபடியே வந்து வாக்காளித்தார். இது மற்ற வாக்காளர்கள் இடையே நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது.
Tags:    

Similar News