ஈரோடு மாவட்ட கூட்டுறவு சேவைகளை பார்வையிட்ட பீகார் மாநில கூட்டுறவுத்துறை அதிகாரிகள்

ஈரோடு மாவட்டத்தில் நடைபெற்று வரும் கூட்டுறவு சேவைகளை பீகார் மாநில கூட்டுறவுத்துறை அதிகாரிகள் பார்வையிட்டனர்.

Update: 2025-01-03 11:45 GMT

ஈரோடு, பெருந்துறை வேளாண்மை உற்பத்தியாளர்கள் கூட்டுறவு விற்பனைச் சங்க செயல்பாடுகளை பீகார் மாநில கூட்டுறவுத்துறை அதிகாரிகள் பார்வையிட்ட போது எடுத்த படம்.

ஈரோடு மாவட்டத்தில் நடைபெற்று வரும் கூட்டுறவு சேவைகளை பீகார் மாநில கூட்டுறவுத்துறை அதிகாரிகள் பார்வையிட்டனர்.

ஈரோடு மாவட்டத்தில் நடைபெற்று வரும் கூட்டுறவு சேவைகளை அறிய பீகார் மாநிலத்தின் கூட்டுறவு மற்றும் வனத்துறை அமைச்சர் டாக்டர்.பிரேம்குமார் தலைமையில், கூட்டுறவுத்துறை அதிகாரிகள் ஈரோடு, பெருந்துறை வேளாண்மை உற்பத்தியாளர்கள் கூட்டுறவு விற்பனைச் சங்க செயல்பாடுகளை நேற்று (ஜன.2) பார்வையிட்டனர்.

பீகார் மாநில கூட்டுறவுச் சங்கங்களின் இணைப்பதிவாளர் லாலன் குமார் ஷர்மா அவர்கள், உதவி பதிவாளர் சப்தார் ரஹ்மான், உதவி பதிவாளர் நர்யான் மற்றும் ஆலோசகர் அனாதி சங்கர் ஆகியோரிடம் ஈரோடு வேளாண்மை உற்பத்தியாளர்கள் கூட்டுறவு விற்பனைச் சங்கத்தில் உறுப்பினர்களிடம் இருந்து தரமான மஞ்சள் கொள்முதல் செய்து, விவசாயிகளுக்கு நல்ல விலை மதிப்பில் விற்பனை செய்வதும், அரவைக்கு தேவையான தரமான மஞ்சளை கொள்முதல் செய்து மங்களம் மஞ்சள் தூள் என்ற பெயரிலும் விற்பனை செய்து வருகிறது.

அதுமட்டுமல்லாமல், மாநிலம் முழுவதும் உள்ள கூட்டுறவுச் சங்கங்களில் இருந்து மசாலா பொருட்களுக்கு தேவையான பொருட்களை கொள்முதல் செய்து வருகிறது. இதன் மூலம் விவசாயிகள் பயன்பெற்று வருகின்றனர். அதேபோன்று பெருந்துறை வேளாண்மை உற்பத்தியாளர்கள் கூட்டுறவு விற்பனைச் சங்கத்தில் கொப்பரை தேங்காய் கொள்முதல் செய்து, நேரடியாகவும், அரவை செய்து பசுமை தேங்காய் எண்ணெய் என்ற பெயரிலும் விற்பனை செய்து வருகிறது என ஈரோடு சரக கூட்டுறவுச் சங்கங்களின் துணைப் பதிவாளர் ஜி.காலிதா பானு விரிவாக எடுத்துரைத்தார்.

இந்நிகழ்வின் போது, ஈரோடு மண்டல கூட்டுறவுச் சங்கங்களின் இணைப்பதிவாளர் அலுவலக துணைப் பதிவாளர் அலுவலர் பா.ரவிச்சந்திரன், ஈரோடு வேளாண்மை உற்பத்தியாளர்கள் கூட்டுறவு விற்பனைச் சங்க துணைப் பதிவாளர் இயக்குநர் து.ரவிச்சந்திரன், துணைப் பதிவாளர் (பயிற்சி) ப.அஜித்குமார், ஈரோடு மாவட்ட கூட்டுறவு ஒன்றிய கூட்டுறவு சார்பதிவாளர் மு.பா.பாலாஜி, சங்க பொது மேலாளர்கள், பணியாளர்கள் மற்றும் கூட்டுறவு ஒன்றிய பணியாளர்கள் உடன் இருந்தனர்.

Tags:    

Similar News