அந்தியூர்: நீர்வழி புறம்போக்கை ஆக்கிரமித்த வீடுகள் அகற்றம்

ஈரோடு மாவட்டம் அந்தியூர் அருகே நீர்வழி புறம்போக்கில் ஆக்கிரமித்து கட்டப்பட்டிருந்த வீடுகள், பொக்லைன் இயந்திரம் மூலம் இடித்து அகற்றப்பட்டன.

Update: 2022-04-21 23:30 GMT

அந்தியூர் அருகே நீர்வழி புறம்போக்கில் ஆக்கிரமித்து கட்டப்பட்டிருந்த வீடுகள் அகற்றப்பட்டன. 

ஈரோடு மாவட்டம் அந்தியூர் அடுத்த கெட்டிசமுத்திரம் ஏரி அருகே நீர் வழி புறம்போக்கில் ஆக்கிரமித்து கட்டப்பட்டிருந்த 14 வீடுகளை அகற்ற நீதிமன்றம் உத்தரவிட்டது. கடந்த 3 மாதத்திற்கும் முன்னதாக, ஆக்கிரமிப்பு அகற்றுவது குறித்து சம்பந்தப்பட்டவர்களுக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டது.

இதைத்தொடர்ந்து, அப்பகுதியில் வசித்து வந்த 14 பேரும் மாற்று இடம் வழங்க வேண்டும் என வருவாய்த் துறையினருக்கு விண்ணப்பம் கொடுத்தனர். பரிசீலனை செய்த வருவாய்த்துறை 14 பேருக்கும் கடந்த மாதம் மாற்று இடம் வழங்கியது.

இந்நிலையில், நேற்று காலை நீர் வழிப்பாதையில் கட்டப்பட்டிருந்த கட்டடங்கள், வீடுகள் , பொக்லைன் இயந்திரம் மூலம் இடித்து அகற்றப்பட்டன. முன்னதாக மின்இணைப்பு துண்டிக்கப்பட்டு அதன் பிறகு வீடுகளை இடிக்கப்பட்டன. அப்போது வருவாய்த்துறை மற்றும் பொதுப்பணித்துறை அதிகாரிகள் உடனிருந்தனர்.

Tags:    

Similar News