ஈரோட்டில் ஊழல் ஒழிப்பு விழிப்புணர்வு வாரம் கடைபிடிப்பு

ஈரோடு கலெக்டர் அலுவலகத்தில் ஊழல் ஒழிப்பு விழிப்புணர்வு வாரம் இன்று கடைபிடிக்கப்பட்டது.;

Update: 2021-10-26 12:15 GMT

ஊழல் ஒழிப்பு விழிப்புணர்வு வார நிகழ்ச்சியில் உறுதிமொழி எடுத்துக் கொண்ட அதிகாரிகள்.

ஈரோடு மாவட்ட ஆட்சித்தலைவர் ஹெச்.கிருஷ்ணனுண்ணி தலைமையில் இன்று மாவட்ட ஆட்சித்தலைவர் அலுவலக கூட்டரங்கில் ஊழல் ஒழிப்பு விழிப்புணர்வு வாரம் -2021ஐ முன்னிட்டு, அனைத்துத்துறை அரசு அலுவலர்கள் மற்றும் பணியாளர்கள் ஊழல் ஒழிப்பு விழிப்புணர்வு உறுதிமொழியினை ஏற்றுக்கொண்டனர்.


உடன் மாவட்ட வருவாய் அலுவலர் முருகேசன்,உதவி ஆட்சியர் (பயிற்சி), ஈரோடு மாநகராட்சி ஆணையாளர் இளங்கோவன், துணை இயக்குநர் (சுகாதாரப் பணிகள்) மரு.சோமசுந்தரம்,மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்களின் நேர்முக உதவியாளர் (பொது) பாலாஜி,மாநகர் நல அலுவலர் மரு.பிரகாஷ் உட்பட பலர் உள்ளனர்.

Tags:    

Similar News