அத்தாணியில் நடந்த திருமண விழாவில் ஓ.பன்னீர்செல்வம் பங்கேற்பு
OPS News Today- அத்தாணியில் நடந்த திருமண விழாவில் ஓ.பன்னீர்செல்வம் பங்கேற்பு;
திருமண விழாவில் கலந்து கொண்ட ஓ.பன்னீர்செல்வம்.
OPS News Today- ஈரோடு மாவட்டம் அந்தியூர் அருகே உள்ள அத்தாணி தனியார் திருமண மண்டபத்தில், அதிமுக மாவட்ட கவுன்சிலர் கே எஸ் சண்முகவேல் இல்ல திருமண விழா நேற்று இரவு நடைபெற்றது.மாவட்ட கவுன்சிலர் கே எஸ் சண்முகவேல் மகன் சௌந்தர்ராஜூக்கும், மதிவதனி க்கும் நடந்த திருமண நிகழ்ச்சியில், முன்னாள் முதல்வரும் அதிமுக இணை ஒருங்கிணைப்பாளருமான ஓ பன்னீர்செல்வம் கலந்து கொண்டு, மணமக்களை வாழ்த்தினார்.
மேலும், முன்னாள் பள்ளிக்கல்வித்துறை அமைச்சரும் கோபி சட்டமன்ற தொகுதி உறுப்பினருமான கே ஏ செங்கோட்டையன் முன்னாள் சுற்றுச்சூழல் துறை அமைச்சரும் பவானி சட்டமன்ற உறுப்பினருமான கே சி கருப்பண்ணன் முன்னாள் எம்பி சத்தியபாமா அந்தியூர் ஒன்றிய துணை செயலாளர் சண்முகானந்தம் மேற்கு மாவட்ட மாணவரணி செயலாளர் குருராஜ் உள்ளிட்ட அதிமுக நிர்வாகிகள் தொண்டர்கள் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தினர்.
அடுத்த முக்கியமான செய்திகளை தெரிந்துகொள்ள: Click Here-1, Click Here-2