தூய்மைப் பணியாளர்களுக்கு அறிவிக்கப்பட்ட ரூ.15,000 ஊக்கத்தொகை வழங்க கோரிக்கை

தூய்மைப் பணியாளர்களுக்கு அறிவிக்கப்பட்ட ரூ.15,000 ஊக்கத்தொகை தமிழக அரசு பொங்கல் பண்டிகைக்குள் வழங்க வேண்டும்.

Update: 2022-01-06 16:45 GMT

பவானி நகராட்சி ஆணையாளரிடம் மனு கொடுத்த சங்க நிர்வாகிகள்.

தூய்மைப் பணியாளர்களுக்கு அறிவிக்கப்பட்ட ரூ.15,000 ஊக்கத்தொகை தமிழக அரசு பொங்கல் பண்டிகைக்குள் வழங்க வேண்டும் என ஈரோடு மாவட்ட ஏஐடியூசி உள்ளாட்சித் துறை பணியாளர் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது.

இ.கம்யூ. கட்சியின் ஈரோடு வடக்கு மாவட்டச் செயலாளர் மாதேஸ்வரன், சங்கத் தலைவர் பாலமுருகன், ஒன்றியச் செயலாளர் கோபால், மாவட்ட சுமைப்பணி தொழில்சங்க ஒருங்கிணைப்பார் சந்திரசேகர், சங்கத்தின் ஒன்றியச் செயலாளர் கண்ணன் மற்றும் நிர்வாகிகள் பவானி நகராட்சி ஆணையாளர் தாமரையிடம் வியாழக்கிழமை அளித்த மனு விவரம் : தமிழக அரசு கொரோனா காலத்தில் பணியாற்றிய தூய்மைப் பணியாளர்களுக்கு வழங்குவதாக அறிவித்த ரூ.15,000 ஊக்கத் தொகையை பொங்கல் பண்டிகைக்குள் வழங்க வேண்டும். ஒப்பந்தத் தொழிலாளர்கள் தினக்கூலியை ரூ.578-ஆக உயர்த்திட வேண்டும். 480 நாள்கள் பணி முடித்த ஒப்பந்தத் தொழிலாளர்களைப் பணி நிரந்தரம் செய்ய வேண்டும்.பவானி நகராட்சி கிளையின் துணைத் தலைவர் செல்லப்பன், செயலாளர் சீனிவாசன், நிர்வாகக் குழு உறுப்பினர் குப்புராஜ், பொருளாளர் ரங்கநாதன் உள்ளிட்டோர் உடன் சென்றிருந்தனர்.

Tags:    

Similar News