அந்தியூர் அரசு மருத்துவமனையில் புதிதாக கட்டப்பட்ட அவசர சிகிச்சை பிரிவு கட்டிடம் திறப்பு

Government Hospital - அந்தியூர் அரசு மருத்துவமனை வளாகத்தில் புதிதாக கட்டப்பட்ட அவசர சிகிச்சை பிரிவு கட்டடத்தை, அந்தியூர் எம்எல்ஏ வெங்கடாசலம் ரிப்பன் வெட்டி திறந்து வைத்தார்

Update: 2022-06-29 04:15 GMT

அந்தியூர் அரசு மருத்துவமனை வளாகத்தில் புதிதாக கட்டப்பட்ட அவசர சிகிச்சை பிரிவு கட்டடத்தை, அந்தியூர் எம்எல்ஏ வெங்கடாசலம் ரிப்பன் வெட்டி திறந்து வைத்தார்.

Government Hospital - ஈரோடு மாவட்டம் அந்தியூர் அரசு மருத்துவமனை வளாகத்தில் அவசர சிகிச்சைப் பிரிவு ஏற்படுத்த வேண்டும் என அந்தியூர் பகுதி பொதுமக்கள் நீண்ட காலமாக வலியுறுத்தி வந்தனர். இதையடுத்து, திருப்பூர் நாடாளுமன்ற உறுப்பினர் நிதியில் இருந்து 53 லட்சம் ரூபாய் ஒதுக்கப்பட்டு, புதிய அவசர சிகிச்சை பிரிவு கட்டடம் கட்டி முடிக்கப்பட்டது. இந்நிலையில், இன்று அவசர சிகிச்சை பிரிவு கட்டட திறப்பு நிகழ்ச்சி நடைபெற்றது.


இதில், சிறப்பு அழைப்பாளராக திருப்பூர் நாடாளுமன்ற உறுப்பினர் கே சுப்பராயன் கலந்து கொண்டார்.இதைத் தொடர்ந்து, புதிய அவசர சிகிச்சை பிரிவு கட்டடத்தை திமுக எம்எல்ஏ ஏ.ஜி.வெங்கடாசலம் பொதுமக்கள் பயன்பாட்டிற்காக திறந்து வைத்தார்.இந்த நிகழ்ச்சியில், அந்தியூர் பேரூராட்சித் தலைவர் எம் பாண்டியம்மாள், மாவட்ட சிறுபான்மை பிரிவு துணை அமைப்பாளர் செபஸ்டியன், முன்னாள் ஊராட்சி செயலர் நாகராஜ் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

அடுத்த முக்கியமான செய்திகளை தெரிந்துகொள்ள: Click Here-1, Click Here-2

Tags:    

Similar News