அந்தியூர் புதிய காவல் ஆய்வாளராக மோகன்ராஜ் பொறுப்பேற்பு
காலியாக இருந்த அந்தியூர் காவல் ஆய்வாளர் பணியிடத்திற்கு, புதிய காவல் ஆய்வாளர் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.;
புதிய காவல் நிலைய ஆய்வாளர் மோகன்ராஜ்
ஈரோடு மாவட்டம் அந்தியூர் காவல் நிலையத்தில், காவல் நிலையத்தில் காவல் ஆய்வாளராக பணியாற்றிய செந்தில், சேலம் மாவட்டத்திற்கு மாறுதல் செய்யப்பட்டார். இதையடுத்து கடந்த சில மாதங்களாக அந்தியூர் காவல் ஆய்வாளர் பணியிடம் காலியாக இருந்தது. இந்நிலையில், அந்தியூர் காவல் நிலையத்தின் புதிய காவல் ஆய்வாளராக மோகன்ராஜ் நியமிக்கப்பட்டார்.
இதைத் தொடர்ந்து, காவல் ஆய்வாளராக நியமிக்கப்பட்ட மோகன்ராஜ், நேற்று அந்தியூர் காவல் நிலையத்தில் பொறுப்பேற்றுக் கொண்டார். நாமக்கல் மாவட்டத்தைச் சேர்ந்த ஆய்வாளர் மோகன்ராஜ், இதற்கு முன் ஈரோடு மாவட்ட நக்சல் தடுப்பு பிரிவு ஆய்வாளராக இருந்தார். காவல் ஆய்வாளருக்கு காவல்துறையினரும், அரசியல் கட்சியினரும் பொதுமக்களும் சமூக ஆர்வலர்களும் வாழ்த்து தெரிவித்தனர்.