தை அமாவாசை: அந்தியூர் பத்ரகாளியம்மன் கோவிலில் பக்தர்கள் சாமி தரிசனம்

தை அமாவாசையையொட்டி, அந்தியூர் பத்ரகாளியம்மன் கோவிலில் ஏராளமான பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர்.;

Update: 2022-01-31 12:45 GMT

சிறப்பு அலங்காரத்தில் காட்சி தரும் அந்தியூர் பத்ரகாளியம்மன்.

தை அமாவாசையை முன்னிட்டு அந்தியூர் பத்ரகாளியம்மன் கோவிலில் ஏராளமான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர். தை அமாவாசையை முன்னிட்டு பிரசித்தி பெற்ற தலங்களில், பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்வது வழக்கம். இந்நிலையில் இன்று தை அமாவாசை என்பதால், ஈரோடு மாவட்டம் அந்தியூர் பத்ரகாளியம்மன் கோவிலில் சுவாமி தரிசனம் செய்ய ஏராளமான பக்தர்கள் வந்தனர். இதேபோல், பெருமாள் கோவில் மற்றும் ஈஸ்வரன் கோவிலில் பக்தர்கள் தரிசனம் செய்து சென்றனர். முன்னதாக, முக கவசம் அணிந்த, வெப்பநிலை சரிபார்க்கப்பட்ட பக்தர்களே கோவிலுக்குள் அனுமதிக்கப்பட்டனர்.

Tags:    

Similar News