பவானியில் புதிய துணை போலீஸ் சூப்பிரண்டு பதவியேற்பு

பவானி புதிய துணை போலீஸ் சூப்பிரண்டாக தீபக்சிவாச் இன்று காலை பதவியேற்றார்.;

Update: 2022-04-27 10:15 GMT

பவானி காவல் நிலையத்தில் புதிய போலீஸ் சூப்பிரண்டாக தீபக்சிவாச் பதவியேற்றார்.

ஈரோடு மாவட்டம் பவானி உட்கோட்டத்தின் துணை போலீஸ் சூப்பிரண்டாக இருந்த கார்த்திகேயன் பணியிட மாற்றம் பெற்றதை தொடர்ந்து புதிய துணை போலீஸ் சூப்பிரண்டாக தீபக்சிவாச் நியமிக்கப்பட்டார். அவர் இன்று காலை பதவியேற்றுக் கொண்டார். இவர் இதற்கு முன்பு ராமேஸ்வரம் துணை போலீஸ் சூப்பிரண்டாக பணியாற்றி வந்தார். புதிய துணை போலீஸ் சூப்பிரண்டு தீபக்சிவாச் ஈரோடு மாவட்ட கலெக்டர் கிருஷ்ணனுண்ணி, மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சசிமோகன், கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு ஆகியோரை சந்தித்து வாழ்த்து பெற்றார்.

Tags:    

Similar News