ஈரோடு மாவட்டத்தில் 1000-ஐ நெருங்குகிறது கொரோனா பாதிப்பு

ஈரோடு மாவட்டத்தில் இன்று ஒரே நாளில் புதிதாக 906 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகி உள்ளது.

Update: 2022-01-19 14:15 GMT

ஈரோடு மாவட்டத்தில் கொரோனா வைரஸ் மின்னல் வேகத்தில் பரவி வருகிறது. நேற்று மாவட்டம் முழுவதும் 3 ஆயிரத்து 861 பேருக்கு பரிசோதனை செய்ததில் 777 பேருக்கு கொரோனா தொற்று இருந்தது. இந்த நிலையில் இன்று புதிதாக மேலும் 906 பேருக்கு கொரோனா தொற்று பரவி உள்ளது. இதனால் மாவட்டத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 1 லட்சத்து 13 ஆயிரத்து 191 ஆக உயர்ந்தது.

மேலும் பல்வேறு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வந்த 317 பேர் குணமடைந்து இன்று வீடு திரும்பினர். இதுவரை மாவட்டத்தில் 1 லட்சத்து 8 ஆயிரத்து 518 பேர் கொரோனா தொற்றில் இருந்து மீண்டுள்ளனர். இதற்கிடையில் ஈரோடு மாவட்டத்தை சேர்ந்த 83 வயது முதியவர் கொரோனா பாதிப்பு ஏற்பட்டு ஈரோடு அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி கடந்த 13-ம் தேதி இறந்தார். இதேபோல், 73 வயது முதியவரும் கடந்த 13-ம் தேதி சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

இதனால் மாவட்டத்தில் கொரோனாவுக்கு பலி ஆனவர்களின் எண்ணிக்கை 718 ஆக உயர்ந்தது.தற்போது மாவட்டத்தில் கொரோனா தொற்று உள்ள 3 ஆயிரத்து 955பேர் பல்வேறு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகிறார்கள். சென்னை, கோவை, செங்கல்பட்டு, கன்னியாகுமரி, திருவள்ளூர் ஆகிய மாவட்டங்களுக்கு அடுத்தபடியாக ஈரோடு மாவட்டத்தில் அதிக அளவில் கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

Tags:    

Similar News