பவானிசாகர்: கூலித்தொழிலாளி அடித்து படுகொலை

புஞ்சை புளியம்பட்டி அருகே கூலித்தொழிலாளியை அடித்து படுகொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பாக போலீசார் விசாரணை.;

Update: 2021-12-14 10:15 GMT

பைல் படம்.

ஈரோடு மாவட்டம் புஞ்சை புளியம்பட்டி அடுத்த குரும்பபாளையம் பகுதியை சேர்ந்தவர் அண்ணாமலை (வயது 30). கூலி தொழிலாளி. இந்நிலையில் நேற்று இரவு அண்ணாமலைக்கும் அவரது உறவினர்கள் சிலருக்கும் இடையே திடீரென தகராறு ஏற்பட்டு, கைகலப்பில் ஈடுபட்டு ஒருவருக்கு ஒருவர் தாக்கிக் கொண்டனர். அங்கிருந்தவர்கள், இரு தரப்பினரையும் சமாதானப்படுத்தி அனுப்பி வைத்துள்ளனர்.

இதனையடுத்து, இன்று காலை அண்ணாமலை அவரது வீட்டில் இறந்து கிடந்தார். தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த புஞ்சை புளியம்பட்டி போலீசார் அண்ணாமலையின் உடலை கைப்பற்றி சத்தியமங்கலம் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இதுகுறித்து புஞ்சை புளியம்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

Similar News