ஈரோடு மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் நகராட்சி முதன்மை செயலாளர் ஆய்வு

ஈரோடு மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை அரசு முதன்மை செயலாளர் தா.கார்த்திகேயன் இன்று (மார்ச் 3) ஆய்வு மேற்கொண்டார்.;

Update: 2025-03-03 10:00 GMT

ஈரோடு சோலார் பகுதியில் புதியதாக கட்டப்பட்டு வரும் பேருந்து நிலையப் பணியினை அரசு முதன்மை செயலாளர் கார்த்திகேயன் நேரில் பார்வையிட்டு, ஆய்வு மேற்கொண்ட போது எடுத்த படம். உடன், மாவட்ட ஆட்சியர் ராஜ கோபால் சுன்கரா உள்ளார்.

ஈரோடு மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை அரசு முதன்மை செயலாளர் தா.கார்த்திகேயன் இன்று (மார்ச் 3) ஆய்வு மேற்கொண்டார்.

ஈரோடு மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில், நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை அரசு முதன்மை செயலாளர் தா.கார்த்திகேயன், மாவட்ட ஆட்சியர் ராஜ கோபால் சுன்கரா முன்னிலையில் கள ஆய்வு மேற்கொண்டார்.


இந்த ஆய்வின் போது, ஈரோடு சோலார் பகுதியில் ரூ.63.50 கோடி மதிப்பீட்டில் புதியதாக கட்டப்பட்டு வரும் பேருந்து நிலையம் பணிகளை அவர் நேரில் சென்று பார்வையிட்டு, ஆய்வு மேற்கொண்டு பணியினை விரைவாக முடித்து பொதுமக்களின் பயன்பாட்டிற்கு கொண்டு வருமாறு அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார்.

தொடர்ந்து, சோலார் பகுதியில் ரூ.18.48 கோடி மதிப்பீட்டில் புதியதாக ஒருங்கிணைந்த காய்கறி மற்றும் மளிகை வளாகம் அமைக்க முதற்கட்ட பணிகள் நடைபெற்று வருவதை அவர் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.


மேலும், ஈரோடு மாநகராட்சி சீர்மிகு நகரத்திட்டத்தின் கீழ் பெரும்பள்ளம் ஓடையை மேம்படுத்தும் பணி ரூ.26.60 கோடி மதிப்பீட்டில் மேற்கொள்ளப்பட்டு வருவதையும் அவர் நேரில் சென்று பார்வையிட்டு, ஆய்வு மேற்கொண்டு பணிகளை விரைந்து முடித்து, மக்களின் பயன்பாட்டிற்கு கொண்டு வர அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார்.

இந்த ஆய்வுகளின் போது, உதவி ஆட்சியர் (பயிற்சி) ராமகிருஷ்ணசாமி, ஈரோடு மாநகராட்சி ஆணையர் தனலட்சுமி, நகர்நல அலுவலர் மரு.கார்த்திகேயன், மாநகராட்சி பொறியாளர் விஜயகுமார், உதவி செயற்பொறியாளர் ஆனந்தன் உட்பட தொடர்புடைய துறை அலுவலர்கள் உடனிருந்தனர்.

Similar News