மழைநீர் தேங்கிய ரயில்வே நுழைவு பாலத்தில் எம்பி பிரகாஷ் ஆய்வு

ஈரோடு மாவட்டம் மொடக்குறிச்சி அருகே மழைநீர் தேங்கிய ரயில்வே நுழைவு பாலத்தை ஈரோடு நாடாளுமன்ற உறுப்பினர் பிரகாஷ் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.;

Update: 2024-10-14 13:00 GMT

மழைநீர் தேங்கிய ரயில்வே நுழைவு பாலத்தில் அதிகாரிகளுடன் நேரில் ஆய்வு செய்த ஈரோடு எம்பி பிரகாஷ்.

ஈரோடு மாவட்டம் மொடக்குறிச்சி அருகே கொடுமுடி - ஈரோடு சாலையில் கணபதிபாளையம் நால்ரோடு பகுதியை அடுத்த ஆரியங்காட்டுப்புதூர் ரயில்வே நுழைவு பாலத்தில் அப்பகுதியில் இருந்து வரக்கூடிய மழை நீர் தேங்கி செல்வதால் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.

இந்நிலையில், ஈரோடு நாடாளுமன்ற உறுப்பினர் கே.இ பிரகாஷ் அதிகாரிகளுடன் நேரில் சென்று ரயில்வே நுழைவு பாலத்தில் மழைநீர் தேங்கி பார்வையிட்டு ஆய்வு செய்தார். பின்னர் மழை நீர் செல்லும் பாதையில் உள்ள இரண்டு குழாய்களை அப்புறப்படுத்தி விட்டு அதற்கு பதிலாக பெரிய குழாய்கள் பதித்து மழை நீர் தேங்காமல் செல்ல ஏற்பாடு செய்ய வேண்டும் என அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினார்.

தொடர்ந்து, மழைநீர் வடிந்து செல்லும் பகுதியான ஊனாம்பள்ளம், பஞ்சலிங்கபுரம் ஆகிய பகுதிகளை பார்வையிட்டு ஆய்வு செய்தார். தொடர்ந்து சாவடிப்பாளையம் புதூரில் உள்ள ரயில்வே நுழைவுப் பாலத்தில் மழை நீர் செல்லும் பகுதியை பார்வையிட்டு ஆய்வு செய்தார். அதனைத் தொடர்ந்து பஞ்சலிங்கபுரம் காவிரி ஆற்றின் கரையில் படித்துறை அமைப்பதற்கான இடத்தை நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

அதனைத் தொடர்ந்து, செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த நாடாளுமன்ற உறுப்பினர் கே. இ. பிரகாஷ், தமிழக முதலமைச்சர் ஸ்டாலின் மற்றும் தமிழக வீட்டு வசதி துறை அமைச்சர் முத்துசாமி ஆகியோர் அறிவுறுத்தலின் படி மழை நீரால் பாதிக்கப்பட்ட பகுதிகளான இப்பகுதியில் ஆய்வு செய்யப்பட்டது.

ரயில்வே நுழைவு பாலத்தில் மழை நீர் வடிந்து செல்லும் பாதை அடைப்பு ஏற்பட்டு இருப்பதாலும், இரண்டு குழாய்கள் மட்டுமே உள்ளதால் மழை நீர் வடிந்து செல்ல தடை ஏற்பட்டிருந்தது. எனவே உடனடியாக மழை நீர் வடிந்து செல்லும் அளவிற்கு பாதையை அமைத்துக் கொடுக்க வேண்டுமென அதிகாரிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. மேலும் , இப்பகுதியில் நிரந்தரமாக மழைநீர் தேங்காதவாறு நடவடிக்கை எடுக்கப்படும் எனத் தெரிவித்தார்.

இந்த ஆய்வின் போது, மொடக்குறிச்சி வட்டாட்சியர் சந்திரசேகரன், மொடக்குறிச்சி பேரூராட்சி தலைவர் செல்வம்பால் சரவணன், நஞ்சை ஊத்துக்குளி ஊராட்சி மன்ற தலைவர் சுகுணா தேவி சிதம்பரம்,  மொடக்குறிச்சி தெற்கு ஒன்றிய திமுக செயலாளர் கதிர்வேல், பேரூராட்சி கவுன்சிலர்கள் ஆனந்த், ஞானசுப்பிரமணியம், அப்பு (எ) பழனிசாமி, திமுக நிர்வாகிகள், பழனிச்சாமி, முன்னாள் கவுன்சிலர்கள் வில் மணி, செந்தில் மற்றும் துறை சார்ந்த அதிகாரிகள் உடன் இருந்தனர்

Tags:    

Similar News