ஈரோடு மாவட்டத்தில் 25க்கும் மேற்பட்ட திரையரங்குகளில் வலிமை திரைப்படம் ரிலீஸ்

நீண்ட நாட்களுக்கு பிறகு நடிகர் அஜித்குமாரின் திரைப்படம் வெளியாகி உள்ளதால் ரசிகர்கள் திருவிழா போல கொண்டாடி வருகின்றனர்.;

Update: 2022-02-24 01:30 GMT

அந்தியூர் பாலமுருகன் தியேட்டர் முன்பு ரசிகர்கள் கொண்டாட்டத்தில் ஈடுபட்ட போது எடுத்த படம்.

உலகமெங்கும் அஜித் நடித்த வலிமை திரைப்படம் ரிலீஸ் ஆகியுள்ளது.ஈரோடு மாவட்டத்தில் அபிராமி,அண்ணா, விஎஸ்பி, மகாராஜா, அன்னபூரணி, சண்டிகா , கோபி ஜீயான் , ஜெயமாருதி, விஜயன் , வளர்மதி, சத்தியமங்கலம் சத்யா, ஜெய்சக்தி, பவானி விஷ்ணு ,  அந்தியூர் பாலமுருகன் , சென்னிமலை அண்ணமார் , சிவகிரி வேல் , பெருந்துறை காஸ்மோ , மகாலட்சுமி, நல்லப்பாஸ் , முருகன் , புளியம்பட்டி ஸ்ரீ தேவி உள்ளிட்ட 25க்கும் மேற்பட்ட திரையரங்கில் அஜித்தின் வலிமை திரைப்படம் திரையிடப்பட்டுள்ளது. 

இதையடுத்து நீண்ட நாட்களுக்கு பிறகு நடிகர் அஜித்குமாரின் திரைப்படம் வெளியாகி உள்ளதால் ரசிகர்கள் திருவிழா போல கொண்டாடி வருகின்றனர். அவ்வகையில், அந்தியூர் அஜித் ரசிகர்கள் நற்பணி மன்றத்தினருக்கு இன்று காலை 7 மணிக்கு ரசிகர் ஷோ காண்பிக்கப்பட்டது.வலிமை படம் ரிலீஸ் ஆனதை முன்னிட்டு, பாலமுருகன் தியேட்டரில் குவிந்த ரசிகர்கள், பட்டாசு வெடித்து, இனிப்பு வழங்கி, நடனமாடி ஆரவாரத்துடன் கொண்டாடினர்.

Tags:    

Similar News