பவானி அருகே வேகத்தடையை உயரபடுத்தி அமைக்க வாகன ஓட்டிகள் கோரிக்கை

பவானி-மேட்டூர் சாலையில் ஆர்டிஓ அலுவலகம் முன்பு உள்ள வேகத்தடையை உயரபடுத்த வேண்டும் என வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Update: 2022-05-23 15:45 GMT

 இருசக்கர வாகனத்தில் வந்த நபர் கீழே விழுவது சிசிடிவி கேமராவில் பதிவான காட்சி.

ஈரோடு மாவட்டம் பவானி-மேட்டூர் சாலையில் ஊராட்சிக்கோட்டை அருகே மோட்டார் வாகன ஆய்வாளர் அலுவலக பேருந்து நிறுத்தம் உள்ளது. இதன், அருகில் சிறிய அளவிலான வேகத்தடை இரண்டு இடங்களில் அமைக்கப்பட்டிருந்தன. இந்நிலையில், இந்த வேகத்தடைகள் மீது பூசப்பட்டுள்ள வெள்ளை பெயிண்ட் மேட்டூரிலிருந்து செல்லும் சாம்பல் லாரிகளில் இருந்து சாம்பல்கள் சிதறி வேகத்தடை முழுவதுமாக மறைந்தன.

இதனால், வாகன ஓட்டிகளுக்கு வேகத்தடை தெரியாதவாறு, உள்ளதால் அவ்வழியே செல்லும் இருசக்கர வாகன ஓட்டிகள் நிலைதடுமாறி அவ்வப்போது கீழே விழுந்து விபத்துக்கள் நிகழ்கின்றன. இதனையடுத்து, இப்பகுதியில் போடப்பட்டுள்ள வேகத்தடையை சற்று உயரமாக மாற்றியமைக்கவும் ,வேகத்தடை அமைக்கப்பட்டுள்ளன என எச்சரிக்கை பலகை சாலையோரத்தில் வைக்க வேண்டுமென பொதுமக்களும் , வாகன ஓட்டிகளும் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags:    

Similar News