பெருந்துறை அருகே மோட்டார் சைக்கிள் கார் மோதி விபத்து
பெருந்துறை அருகே மோட்டார் சைக்கிள் மீது கார் மோதிய விபத்தில் விவசாயி பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.;
ஈரோடு மாவட்டம் பெருந்துறை அருகே கொடக்கிட்டாம்பாளையம், வடுகன்காடு பகுதியை சேர்ந்தவர் சுப்பிரமணி (வயது 60). இவர் அதே பகுதியில் விவசாயம் செய்து வருகிறார். சம்பவத்தன்று சுப்ரமணி காஞ்சிக்கோவில் சென்று விட்டு, வீட்டிற்கு திரும்பிகே கொண்டிருந்தார். அப்போது, காஞ்சிக்கோவில் ரோடு பிரிவு அருகே தேசிய நெடுஞ்சாலையை கடக்கும் பொழுது கோவையில் இருந்து சேலம் நோக்கி சென்ற ஒரு கார் எதிர்பாராதவிதமாக சுப்ரமணி மோட்டார் சைக்கிள் மீது மோதியது. இதில் படுகாயம் அடைந்த சுப்ரமணி பெருந்துறை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்தார். இச்சம்பவம் குறித்து பெருந்துறை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.