ஈரோடு மாவட்டத்தில் மாற்றுத்திறனாளிகளுக்கு மாதாந்திர உதவித்தொகை பெற முகாம்

ஈரோடு மாவட்டத்தில் மாற்றுத்திறனாளிகளுக்கு மாதாந்திர உதவித்தொகை பெற விண்ணப்பிக்க டிசம்பர் 3-ம் தேதி சிறப்பு முகாம்.

Update: 2021-11-26 15:00 GMT

பைல் படம்.

ஈரோடு மாவட்டத்தில், வருவாய்த்துறை, சமூக பாதுகாப்புத் திட்டத்தில், மாதாந்திர பராமரிப்பு உதவித்தொகை பெற விண்ணப்பித்து, இதுவரை கிடைக்கப் பெறாத மாற்றுத்திறனாளிகளுக்கு வரும், டிசம்பர் 3 ம்தேதி , காலை 9 மணி முதல்,. ஈரோடு, கொடுமுடி,. மொடக்குறிச்சி, பெருந்துறை, நம்பியூர், கோபிச்செட்டிப்பாளையம், சத்தியமங்கலம், தாளவாடி, அந்தியூர், பவானிஆகிய தாலுகாக்களில், சிறப்பு முகாம் நடைபெற உள்ளது.

இதுவரை மாதாந்திர உதவித்தொகை கிடைக்கப் பெறாத அனைத்து மாற்றுத்திறனாளிகளும் இந்த வாய்ப்பை பயன்படுத்தி, அந்தந்த வட்டாட்சியர் அலுவலகங்களில் நடைபெறும் சிறப்பு முகாமில் கலந்துகொண்டு பயன்பெறுமாறு ஈரோடு மாவட்ட மாறறுதிறனாளிகள் நல அலுவலர் கோதைசெல்வி தெரிவித்துள்ளார்.

முகாமில் கலந்துகொள்ள இதற்கு முன்பு இணைய வழியாக விண்ணப்பித்தவர்கள், அதற்கான ஒப்புகைச் சீட்டினை கொண்டு வரவேண்டும். இதுவரை விண்ணப்பிக்காதவர்கள், வரும் 3ம்தேதி வெள்ளிக் கிழமைக்குள், அந்தந்த தாலுகா அலுவலக வளாகத்தில் உள்ள இ-சேவை மையத்தில் விண்ணப்பித்து, அந்த ஒப்புகைச் சீட்டினை கொண்டுவரவேண்டும்.

இணையவழியில் விண்ணப்பிக்க தவறியவர்கள் ஆதார் அட்டை, குடும்ப அட்டை, மாநில அரசால் வழங்கப்பட்ட மாற்றுத்திறனாளிகளுக்கான அடையாள அட்டை , வங்கி கணக்கு புத்தகம், மார்பளவு புகைப்படம் ஆகியவற்றின் அசல் மற்றும் நகல்களை கொண்டு வரவேண்டும். 4. 40 சதவிகிதத்துக்கும் மேல் பாதிப்புடைய மாற்றுத்திறனாளிகளும், ஆண்டுக்கு ரூ 3 லட்சத்திற்கும் குறைவாக வருவாய் உள்ள மாற்றுத் திறனாளிகளும், இந்த முகாமில் கலந்துகொண்டு பயன்பெறலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags:    

Similar News