ஆப்பக்கூடல் அருகே பக்கத்து வீட்டில் பணத்தை திருடிய இளைஞர் கைது
பவானி அடுத்த ஆப்பக்கூடல் அருகே பக்கத்து வீட்டில் பணத்தை திருடிய இளைஞரை போலீசார் கைது செய்து, கோபி மாவட்ட சிறையில் அடைத்தனர்.;
ஈரோடு மாவட்டம் பவானி அடுத்த ஆப்பக்கூடல் அருகே உள்ள ஒரிச்சேரி பகுதியை சேர்ந்தவர் ஸ்ரீதர். இவர் தனது வீட்டில் ரூ.15 ஆயிரத்தை வைத்திருந்துள்ளார். பக்கத்து வீட்டை சேர்ந்த தமிழ்செல்வன் (வயது 20) என்பவர், ஸ்ரீதர் வீட்டில் வைத்திருந்த பணத்தில் ரூ.3 ஆயிரத்தை திருடியுள்ளார்.
இதனை அறிந்த ஸ்ரீதர், ஆப்பக்கூடல் போலீசாரிடம் புகார் தெரிவித்தார்.அதன் பேரில், ஆப்பக்கூடல் போலீசார் தமிழ்செல்வனை கைது செய்தனர். பின்னர், திருடிய பணத்தை மீட்டு, கோபி மாவட்ட சிறையில் அடைத்தனர்.