மொடக்குறிச்சி அருகே அடுத்தடுத்து 2 வீடுகளில் கொள்ளை: மர்ம நபர்கள் கைவரிசை

மொடக்குறிச்சி அருகே அடுத்தடுத்து 2 வீடுகளில் கொள்ளையடித்துச் சென்ற சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.;

Update: 2021-09-02 06:30 GMT

மொடக்குறிச்சி அருகே உள்ள 46 புதூர் பகுதியைச் சேர்ந்தவர் சீராளன் (53). இவரது மனைவி வடிவுக்கரசி. இவர்கள் இருவரும் ஈரோடு, நாடார் மேட்டில் டைலர் கடை வைத்து நடத்தி வருகின்றனர். இந்நிலையில் நேற்று காலை வழக்கம்போல் வீட்டை பூட்டிவிட்டு கடைக்கு சென்றுவிட்டு பின்னர் இரவு வீட்டிற்கு வந்த போது வீட்டின் முன்பக்க கதவு உடைக்கப்பட்டு இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.

பின்னர் உள்ளே சென்று பார்த்தபோது பீரோ உடைக்கப்பட்டு பீரோவில் இருந்த ஒரு லட்சம் ரூபாய் ரொக்கம், ஒரு பவுன் தங்க நகை, முத்து மணி மாலை, வெள்ளி டம்ளர், வெள்ளி காயின், வெள்ளி விளக்கு, பித்தளை விளக்கு உள்ளிட்ட பொருட்கள் கொள்ளையடிக்கப்பட்டிருந்தது தெரிய வந்தது. இதுகுறித்து மொடக்குறிச்சி போலீசாருக்கு கொடுத்த தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு சென்ற இன்ஸ்பெக்டர் தீபா மற்றும் போலீசார் கொள்ளை சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

அதேபோல் மொடக்குறிச்சி அடுத்த கேட்புதூர் பகுதியை சேர்ந்தவர் குமார் ராஜா (63) ஓய்வு பெற்ற அரசு ஊழியர். இவரது மனைவி தேவி (56) இவர்கள் நேற்று மதியம் நாமக்கல் மாவட்டம் பரமத்தி வேலூர் அருகே உள்ள பாண்டமங்கலத்தில் உள்ள தனது உறவினர் வீட்டிற்கு சென்றுவிட்டு இரவு வீட்டுக்கு வந்துள்ளனர்.

அப்போது வீட்டின் முன்பக்க கதவு உடைக்கப்பட்டு இருப்பதை கண்டு உள்ளே சென்று பார்த்தபோது பீரோ உடைக்கப்பட்டு அதிலிருந்த ரொக்கம் ரூ. 32 ஆயிரம் மற்றும் தோடு, மோதிரம் என பொருட்கள் கொள்ளை அடிக்கப்பட்டு இருந்தது தெரியவந்தது. இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த மொடக்குறிச்சி போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Tags:    

Similar News