பெட்ரோல், விலை உயர்வு : காங்கிரஸார் கையெழுத்து இயக்கம்

பெட்ரோல் டீசல் விலை உயர்வை கண்டித்து, ஈரோடு தெற்கு மாவட்ட காங்கிரஸ் கமிட்டி சார்பில், கையெழுத்து இயக்கம் மற்றும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

Update: 2021-07-08 11:00 GMT

ஈரோடு தெற்கு மாவட்ட காங்கிரஸ் கமிட்டியின் சார்பில், மொடக்குறிச்சியில் உள்ள பெட்ரோல் பங்க் முன்பு கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஈரோடு தெற்கு மாவட்டத் தலைவர்,   மக்கள் ஜி ராஜன் தலைமையில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில் பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு ஆகியவற்றின் விலை உயர்வை மத்திய அரசு திரும்பப் பெறவேண்டும் என வலியுறுத்தி கோஷங்களை எழுப்பினர்.

இதை தொடர்ந்து நடைபயணமாக சென்று, மொடக்குறிச்சி பகுதியில் உள்ள பெட்ரோல் பங்க் அருகில் பொதுமக்களிடம் மத்திய அரசுக்கு எதிராக கையெழுத்து பெறப்பட்டது. இதனை தொடர்ந்து பொதுமக்களுக்கு பெட்ரோல் டீசல் விலை ஏற்றம் குறித்த விழிப்புணர்வு நோட்டீஸ்கள் வழங்கப்பட்டது.

இந்நிகழ்ச்சியில் முன்னாள் எம்எல்ஏ பழனிச்சாமி, மொடக்குறிச்சி வட்டாரத் தலைவர் முத்துக்குமார், மாநில பொதுக்குழு உறுப்பினர் பாலசுப்பிரமணியம் ,மாவட்ட பொருளாளர் ரவி, உள்ளிட்ட ஏராளமான நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News