மொடக்குறிச்சியில் மழைக்கால சிறப்பு மருத்துவ முகாம்
கொம்பனைப்புதூர் ஊராட்சியில் அரசு பொது சுகாதாரம் , நோய் தடுப்பு மருந்து துறை இணைந்து சிறப்பு மருத்துவ முகாம் நடத்தியது
மொடக்குறிச்சி தொகுதி, கொடுமுடி வட்டம், கொம்பனைப்புதூர் ஊராட்சியில் தமிழ்நாடு அரசு பொது சுகாதாரம் மற்றும் நோய் தடுப்பு மருந்து துறை நடத்திய சிறப்பு மருத்துவ முகாம் நடைபெற்றது.
ஈரோடு பாராளுமன்ற உறுப்பினர் அ.கணேசமூர்த்தி, மொடக்குறிச்சி சட்டமன்ற உறுப்பினர் டாக்டர் சி.சரஸ்வதி முகாமை தொடக்கி வைத்து பேசினர்.
இம்முகாமில் பொது மருத்துவம், இருதய நோய்கள் ரத்த அழுத்த நோய், சர்க்கரை நோய், சித்த மருத்துவம், குழந்தை நல பிரிவு, அறுவை சிகிச்சை, எலும்பு மூட்டு பிரிவு, கர்ப்பிணிபெண்கள், கண் மருத்துவம், தோல் மருத்துவம், காது மூக்கு தொண்டை பிரிவு, பல் மருத்துவ பிரிவு, மனநலம், புற்றுநோய் , காசநோய் முதலிய நோய்களுக்கு மருத்துவ நிபுணர்களால் சிகிச்சை அளிக்கப்பட்டு மருந்துகள் வழங்கப்பட்டது.இம்முகாமில் ஊராட்சி ஒன்றிய தலைவர் ராஜ்குமார், ஒன்றிய கவுன்சிலர் பரமசிவம் மற்றும் வார்டு உறுப்பினர்களும் பொதுமக்களும் கலந்து கொண்டனர்..