பாஜ.க, கொரோனா தடுப்பு மையத்தின் சார்பில் இலவச ஆவி பிடிக்கும் இயந்திரம்
ஈரோட்டில் பாஜ.,கொரோனா தடுப்பு மையத்தின் சார்பில் பொதுமக்களுக்கு இலவசமாக கபசுர குடிநீர் மற்றும் மூலிகை தழைகளைக் கொண்டு ஆவி பிடிக்கும் இயந்திரம் அமைத்துள்ளனர்
ஈரோடு தெற்கு மாவட்ட பாஜ., சார்பில் கடந்த மாதம் 22ம் தேதி கணபதிபாளையம் அருகே உள்ள கண்ணுடையாம்பாளையத்தில் கொரோனா தடுப்பு மையம் அமைக்கப்பட்டது.
இந்த தடுப்பு மையத்தில் தினசரி பொதுமக்களுக்கு கபசுர குடிநீர் வழங்கப்பட்டு வருகிறது. கடந்த சில நாட்களாக கொரோனோ தொற்று அதிகரித்து வரும் நிலையில் தெற்கு மாவட்ட தகவல் தொழில்நுட்ப செயலாளர் பேராசிரியர் மூர்த்தி செல்வக்குமரன் ஏற்பாட்டில் கபசுரக் குடிநீருடன் சேர்த்து வைரஷை தடுக்கும் வகையில் ஆவி பிடிக்கும் இயந்திரம் கொண்டுவரப்பட்டது.
அந்த இயந்திரமானது மஞ்சள், நொச்சித்தழை, வேப்பந்தழை, தைலம் ஆகியவைகளை சேர்த்து நன்கு கொதிக்க வைத்து அதில் வரும் ஆவியைக் குழாய் மூலம் வரும்படி வடிவமைத்து ஆவி பிடிக்கும் வகையில் வடிமைக்கப்படுடுள்ளது.
இந்த ஆவி பிடிக்கும் இயந்திரத்தை பொதுமக்கள் பயன்பாட்டிற்கு வைத்துள்ளனர். தினசரி காலை 7 மணி முதல் 10 மணி வரை பொதுமக்களுக்கு இலவசமாக ஆவி பிடித்துக் கொள்ளலாம் எனவும் தெரிவித்துள்ளனர