சுதந்திர போராட்ட வீரர் பொல்லான் நினைவு தினம் : அமைச்சர்கள் மரியாதை
மொடக்குறிச்சியில், சுதந்திர போராட்ட வீரர் பொல்லானின் நினைவு தினத்தையொட்டி, அமைச்சர்கள் மலர்தூவி மரியாதை செலுத்தினர்.
சுதந்திரப் போராட்ட வீரர் பொல்லானின் 216வது நினைவு தினத்தையொட்டி, அரசியல் கட்சிகள் மற்றும் பல்வேறு அமைப்புகள் சார்பில் மரியாதை செலுத்தப்பட்டு வருகிறது. அதன் ஒரு பகுதியாக ஈரோடு அடுத்துள்ள மொடக்குறிச்சி சமுதாய கூடத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில், வீட்டுவசதித்துறை அமைச்சர் முத்துசாமி, சுற்றுலாத்துறை அமைச்சர் மதிவேந்தன் மற்றும் ஆதித்திராவிடர் நலத்துறை அமைச்சர் கயல்விழி செல்வராஜ் ஆகியோர் கலந்து கொண்டு பொல்லான் படத்திற்கு மலர்தூவி மரியாதை செலுத்தினர்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் முத்துசாமி கூறுகையில், சுதந்திர போராட்ட வீரர் பொல்லானின் நினைவு தினமும் இன்று அனுசரிக்கப்பட்டது. முதல்வர் ஸ்டாலின், இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு நடைபெற்ற மாநாட்டில் பொல்லானுக்கு மணிமண்டபம், சிலை, பிறந்த நாள அரசு விழாகவாக நடத்த வேண்டும் என கூறியிருந்தார். அதன்படி பொல்லான் அவர்களின் பிறந்த தினமான டிசம்பர் 28ம் தேதி அரசு விழாவாக கொண்டாடப்படும் என்றார்.