கொரோனா தொற்றால் தலைமை ஆசிரியர் உயிரிழப்பு
கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த தலைமை ஆசிரியர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.;
ஈரோடு மாவட்டம் கொடுமுடி அருகே சாலைப்புதூரை சேர்ந்தவர் உமாமகேஸ்வரி. இவர் பெரிய செம்மாண்டம் பாளையம் தொடக்கப்பள்ளியில் தலைமை ஆசிரியராக பணிபுரிந்து வருகிறார். இந்நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன்பாக உமாமகேஸ்வரி
கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். ஆனால் தற்போது சிகிச்சை பலனின்றி உமா மகேஸ்வரி உயிரிழந்தார். இதனிடேயே உமாமகேஸ்வரியின் கணவருக்கு கொரோனா பரிசோதனை மேற்கொண்டதில் அவருக்கு தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.