அரச்சலூரில் பேருந்து நிலையம் அமைக்கும் பணி :அமைச்சர் முத்துசாமி ஆய்வு
அரச்சலூரில் பேருந்து நிலையம் அமைக்கும் பணி நடைபெற்று வருவதை அமைச்சர் முத்துசாமி நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.;
அரச்சலூரில் பேருந்து நிலையம் அமைக்கும் பணி நடைபெற்று வருவதை தமிழக வீட்டுவசதித்துறை அமைச்சர் முத்துசாமி நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
மொடக்குறிச்சி ஒன்றியத்திற்குட்பட்ட அரச்சலூரில் கடந்த பல ஆண்டுகளாக பேருந்து நிலையம் அமைக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்து வந்தனர். அரச்சலூர் கைக்காட்டி பிரிவில் வடுகபட்டி பேரூராட்சிக்குட்பட்ட பகுதியில் புதிய பேருந்து நிலையம் அமைக்க முடிவு செய்து அதன்படி கடந்த சில மாதங்களுக்கு முன்பு தமிழக வீட்டுவசதித்துறை அமைச்சர் முத்துசாமி இடத்தை பார்வையிட்டு புதிய பேருந்து நிலையம் அமைப்பதற்கான ஏற்பாடுகளை செய்தார்.
இந்நிலையில் பேருந்து நிலையம் அமைப்பதற்காக தேர்வு செய்யப்பட்ட இடம் குழியாக இருந்ததால் மண் கொட்டி சமன் செய்து வருகின்றனர். இதனை தமிழக வீட்டுவசதித்துறை அமைச்சர் முத்துசாமி நேற்று நேரில் பார்வையிட்டு பணிகளை ஆய்வு செய்தார்..
இந்த ஆய்வின்போது, மாநில நெசவாளர் அணி செயலாளர் சச்சிதானந்தம், மாநில கொள்ளைபரப்பு இணைச் செயலாளர் சந்திரகுமார், மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் பிரகாஷ், மொடக்குறிச்சி மேற்கு ஒன்றிய செயலாளர் குணசேகரன், கிழக்கு கதிர்வேல், தெற்கு விஜயகுமார், சென்னிமலை செங்கோட்டையன், பெருந்துறை சாமி, குன்னத்தூர் சுப்பிரமணி, கொடுமுடி மேற்கு நடராசன், பேரூராட்சி செயல் அலுவலர்கள் வடுகபட்டி அசோக்குமார், அரச்சலூர் மாதவன் மற்றும் மாநில, மாவட்ட, ஒன்றிய, பேரூர் கழக நிர்வாகிகள் என பலர் கலந்து கொண்டனர்.