காங்கிரஸ் சார்பில் ஊத்துக்குளியில் மக்கள் விழிப்புணர்வு பேரணி
ஈரோடு தெற்கு மாவட்ட காங்கிரஸ் கமிட்டியின் சார்பில், மாபெரும் மக்கள் விழிப்புணர்வு பேரணி ஊத்துக்குளியில் நடைபெற்றது.;
ஈரோடு தெற்கு மாவட்ட காங்கிரஸ் கமிட்டியின் சார்பில், மாவட்ட தலைவர் மக்கள் ஜி ராஜன் தலைமையில். மத்திய பாஜக அரசுக்கு எதிராக பேரணி நடைபெற்றது. அரசின் மக்கள் விரோத நடவடிக்கைகளால், இந்திய அரசின் பொருளாதாரம் வீழ்ச்சி அடைந்துள்ளது, பல தொழில்கள் பாதிக்கப்படுள்ளது. இதனால் ஏற்பட்டுள்ள விலைவாசி உயர்வால், மக்கள் பரிதவிப்பதாக குற்றம்சாட்டி, மக்கள் விழிப்புணர்வு பேரணி ஊத்துக்குளியில் நடைபெற்றது.
மொரட்டுபாளையம் பகுதியில் ஆரம்பித்து, முக்கிய வீதிகள் வழியாக நடைபெற்ற இந்தப் பேரணியை, தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் மாநில பொதுச்செயலாளரும், ஈரோடு கிழக்கு சட்டமன்ற உறுப்பினருமான திருமகன் ஈவெரா துவக்கி வைத்தார். சிறப்பு அழைப்பாளர்களாக முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் ஆர் எம் பழனிச்சாமி உள்ளிட்ட ஏராளமான நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.