தூய்மைப்பணியாளர்களுக்கு நிவாரணப்பொருள்: எம்எல்ஏ திருமகன் ஈவெரா வழங்கினார்

ஈரோடு, அனுமன்பள்ளியில் தூய்மை பணியாளர்கள், மேல்நிலைத்தொட்டி ஆபரேட்டர்கள், ஊராட்சி பணியாளர்களுக்கு கொரோனா நிவாரணப்பொருட்களை காங்கிரஸ் எம்எல்ஏ திருமகன் ஈவெரா வழங்கினார்.

Update: 2021-06-17 10:30 GMT

அனுமன்பள்ளியில் தூய்மை பணியாளர்களுக்கு  நிவாரணப்பொருட்களை வழங்கிய காங்கிரஸ் எம்எல்ஏ திருமகன் ஈவெரா.

ஈரோடு மாவட்டம் மொடக்குறிச்சி அருகேயுள்ள அட்டவணை அனுமன்பள்ளி மற்றும் முகாசி அனுமன்பள்ளி ஊராட்சியில் உள்ள தூய்மைப்பணியாளர்கள், மேல்நிலைத்தொட்டி ஆபரேட்டர்கள் மற்றும் ஊராட்சி பணியாளர்களுக்கு கொரோனா நிவாரணப்பொருட்கள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.

மொடக்குறிச்சி வட்டார முன்னாள் காங்கிரஸ் கமிட்டி தலைவர் செந்தில் ராஜா ஏற்பாட்டில் நடைபெற்ற இந்நிகழ்ச்சிக்கு, அ.அனுமன்பள்ளி ஊராட்சி மன்ற தலைவர் தனபாக்கியம் கிருஷ்ணமூர்த்தி மற்றும் மு.அனுமன்பள்ளி ஊராட்சி மன்ற தலைவர் பெரியசாமி ஆகியோர் தலைமை தாங்கினார்கள். தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி விவசாய பிரிவு மாநில பொதுச் செயலாளர் கிருஷ்ணமூர்த்தி அவர்கள் முன்னிலை வகித்தார்.

நிகழ்ச்சியில், ஈரோடு கிழக்குத்தொகுதி எம்எல்ஏ, தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி பொதுச்செயலாளர் திருமகன் ஈவெரா கலந்து கொண்டு அத்தியாவசிய தேவையான மளிகை பொருட்கள், காய்கறிகள் மற்றும் மதிய உணவு பிரியாணி ஆகியவற்றை வழங்கினார். இதனை தொடர்ந்து, அரச்சலூர் ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவர்கள், ஊராட்சி நிர்வாகிகள் அனைவருக்கும் சத்து மாத்திரைகளை வழங்கினர்.

Tags:    

Similar News