காரும் லாரியும் நேருக்கு நேர் மோதிக் கொண்ட விபத்து: 5 பேர் பலி

காரும், லாரியும் நேருக்கு நேர் மோதிக்கொண்ட விபத்தில் 4 பெண்கள் உட்பட 5 பேர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர்.;

Update: 2021-11-18 11:45 GMT

விபத்திற்குள்ளான வாகனங்கள்.

ஈரோடு மாவட்டம் மொடக்குறிச்சி அருகே உள்ள முத்துகவுண்டம்பாளையம் பகுதியை சேர்ந்த 8 பேர் இன்று காலை ஆம்னி வாடகை காரில் பழனி முருகன் கோயிலுக்கு சென்றுவிட்டு தரிசனம் செய்துவிட்டு 8 பேரும் காரில் வந்து கொண்டிருந்தனர். ஈரோடு மாவட்டம் சிவகிரி அருகே உள்ள விளக்கேத்தி அருகே வரும் போது எதிரே வந்த சிமெண்ட் லாரியில் மோதி கார் சுக்குநூறாகி விபத்து ஏற்பட்டது. இதில் டிரைவர் படையப்பா, காரில் வந்த தெய்வானை, மஞ்சுளா, அருக்காணி, தேன்மொழி என 4 பெண்கள் டிரைவர் படையப்பா உட்பட 5 பேர் சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி பலியாகினர்.

மேலும் காரில் வந்த குமரேசன், மோகன்குமார், முத்துசாமி ஆகிய 3 பேரும் உயிர் தப்பினர். இச்சம்பவம் குறித்து தகவலறிந்த ஈரோடு டவுன் டிஎஸ்பி., மோகனசுந்தரம் சிவகிரி போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று பிரேதத்தை மீட்டு பெருந்துறை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் விபத்து நடைபெற்ற இடத்தில் அடிக்கடி விபத்து நடைபெற்று உயிரிழப்பு அதிகரித்து வருகிறது. எனவே இந்த பகுதியில் சாலையை அகலப்படுத்தி அல்லது வேகத்தடை அமைக்க வேண்டுமென அப்பகுதியை சேர்ந்த பொதுமக்கள் டிஎஸ்பி.,ஐ முற்றுகையிட்டு வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. ஈரோடு அருகே விபத்தில் 5 பேர் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Tags:    

Similar News