அதிமுக - மக்கள் நீதி மய்யம் மோதல்

மொடக்குறிச்சி சட்டமன்ற தொகுதியில் மக்கள் நீதி மய்யம் சார்பில் போட்டியிடும் வேட்பாளர் வாக்கு சேகரிப்பில் ஈடுபட கூடாது எனக்கூறி அதிமுகவினர் மோதலில் ஈடுபட்டதால் பரபரப்பு.;

Update: 2021-03-25 05:22 GMT

ஈரோடு மாவட்டம் மொடக்குறிச்சி தொகுதி மக்கள் நீதி மையம் வேட்பாளர் ஆனந்த்ராஜேஷ் வாக்கு சேகரிப்பதற்காக பிரச்சாரத்தை இன்று மேற்கொண்டார்.


அப்போது மொடக்குறிச்சி அருகே உள்ள பள்ளியூத்து என்னும் பகுதியில் ஓட்டு சேகரிக்க சென்ற போது அதிமுக பிரமுகர்கள் இந்த ஏரியா அதிமுகவின் கோட்டை என்றும் இங்கு யாரும் ஓட்டு கேட்க வரக்கூடாது என்றும் கூறி மக்கள் நீதி மையம் வேட்பாளர் ராஜேஸை தகாத வார்த்தைகள் பேசி தாக்குதலில் ஈடுபட்டுள்ளனர். இதனையடுத்து மக்கள் நீதி மையம் வேட்பாளர் உடன் சென்ற நிர்வாகிகள் மற்ற உறுப்பினர்கள் அதிமுக பிரமுகரை தடுத்து நிறுத்த முற்பட்டதால் இருதரப்பினரிடையே மோதல் ஏற்பட்டது.

இச்சம்பவம் தொடர்பாக அரச்சலூர் காவல்நிலையத்திற்கு தகவல் தெரிவித்ததையடுத்து அங்கு வந்த காவல்துறையினர் பிரச்சாரம் செய்யும் வேட்பாளரை தடுக்க யாருக்கும் உரிமையில்லை என்றும் உடனடியாக அவர்களை பிரச்சாரம் செய்ய அனுமதியுங்கள் என்று கூறி அதிமுக பிரமுகர்களை அங்கிருந்து அப்புறபடுத்தினர். இருகட்சியினருக்குமிடையே ஏற்பட்ட மோதலால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

Tags:    

Similar News