டாஸ்மாக் கடையில் அதிரடி சோதனை

மொடக்குறிச்சி டாஸ்மாக் கடையில் கலால் மற்றும் தேர்தல் அதிகாரிகள் திடீர் சோதனை நடத்தினர்.;

Update: 2021-03-31 12:03 GMT

மொடக்குறிச்சி டாஸ்மாக் கடையில் மதுபாட்டில்கள் கள்ளத்தனமாக விற்பனை செய்து வருவதாகவும், வாக்காளர்களுக்கு வழங்குவதற்கு பரிசு பொருட்கள் மற்றும் பணத்தை பதுக்கி வைத்திருப்பதாக மொடக்குறிச்சி தேர்தல் நடத்தும் அலுவலர் ஜெயராணிக்கு புகார் வந்துள்ளது.

இதுகுறித்து தேர்தல் நடத்தும் அலுவலர் ஜெயராணி, டாஸ்மாக் கடைகள் சோதனை நடத்துமாறு கலால் அலுவலகத்திற்கு உத்தரவிட்டிருந்தார். இதனைத் தொடர்ந்து கோட்ட கலால் அலுவலர் குமரேசன், கோபி கோட்ட கலால் அலுவலர் ஷீலா, கலால் மேற்பார்வை அலுவலர் குமார், ஈரோடு டவுன் டிஎஸ்பி., ராஜு, மொடக்குறிச்சி இன்ஸ்பெக்டர் தீபா உள்ளிட்ட அதிகாரிகள் டாஸ்மாக் கடையில் திடீர் சோதனையில் ஈடுபட்டனர்.

அப்போது மொடக்குறிச்சி டாஸ்மாக் கடையில் எத்தனை மது பாட்டில்கள் உள்ளது, தற்போது எத்தனை மது பாட்டில்கள் விற்பனை ஆகியுள்ளது என்பது குறித்து கணக்கெடுக்கப்பட்டது. மேலும் விற்பனையான மது பாட்டில்களில் அதற்குண்டான தொகை உள்ளதா என அதிகாரிகள் ஆய்வு செய்தனர். அதனை தொடர்ந்து அவல்பூந்துறையில் உள்ள டாஸ்மாக் கடையில் சோதனையிட்டனர்.

Tags:    

Similar News