மீன் வியாபாரியிடமிருந்து 1.30லட்சம் பறிமுதல்

மொடக்குறிச்சி சட்டமன்றத் தொகுதியில் உரிய ஆவணங்களின்றி எடுத்துச் செல்லப்பட்ட ரூ. 1 லட்சத்து 30 ஆயிரம் ரூபாய் பணத்தை தேர்தல் பறக்கும் படையினர் பறிமுதல் செய்தனர்.;

Update: 2021-03-31 12:15 GMT

ஈரோடு மாவட்டத்திலுள்ள 8 சட்டமன்றத் தொகுதியிலும் தேர்தல் பறக்கும் படையினர் சுழற்சி முறையில் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் இன்று மொடக்குறிச்சி சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட கருமாண்டாம்பாளையத்தில் பறக்கும் படையினர் வாகன சோதனையில் ஈடுபட்டபோது, அவ்வழியாக வந்த காரை சோதனையிட்டனர். அதில் உரிய ஆவணங்கள் இன்றி எடுத்து வரப்பட்ட ரூ.1 லட்சத்து 30 ஆயிரம் ரூபாயை இருப்பது தெரியவந்தது. பின்னர் மேற்கொண்ட விசாரணையில் ஈரோடு மோளக்கவுண்டன்பாளையம் பாலதண்டாயுத வீதியைச் சேர்ந்த ராஜேஷ் (36), மீன் வியாபாரி என்பதும் மீன் வாங்குவதற்காக நாகப்பட்டிணம் சென்று கொண்டிருந்ததாகவும் தெரிவித்தார். இதனையடுத்து பறிமுதல் செய்யப்பட்ட பணத்தை மொடக்குறிச்சி சட்டமன்றத் தொகுதி தேர்தல் நடத்தும் உதவி அலுவலர் சங்கர் கணேஷிடம் ஒப்படைத்தனர்.

Tags:    

Similar News