காலிங்கராயன் வாய்க்கால் பகுதியில் 10 ஆயிரம் பனை விதை நடும் நிகழ்ச்சி

பொன்னியின் சேவகன் அறக்கட்டளையின் சார்பில் காலிங்கராயன் வாய்க்கால் பகுதியில் 10 ஆயிரம் பனை விதை நடும் நிகழ்ச்சி நடைபெற்றது.

Update: 2021-10-18 09:15 GMT

பனை விதைகளை நடும் மலையம்பாளையம் காவல்நிலைய உதவி ஆய்வாளர் மன்சூர் அலி.

ஈரோடு மாவட்டம், பாசூரில் பொன்னியின் சேவகன் அறக்கட்டளையின் சார்பில் 10 ஆயிரம் பனை விதைகள் நடும் நிகழ்ச்சி நடைபெற்றது. அறக்கட்டளையின் தலைவர் சந்தோஷ்குமார் தலைமை தாங்கினார்.

இந்த விதை நடும் நிகழ்ச்சியில் காலிங்கராயன் வாய்க்கால் விவசாயிகள் மன்றத்தின் மனோகரன், மலையம்பாளையம் காவல்நிலைய உதவி ஆய்வாளர் மன்சூர் அலி, காலிங்கராயன் பாசன சபை எண்.4 செயலாளர் சுப்பிரமணி, பசுமை விழுதுகள் துணைச் செயலாளர் மூர்த்தி, கலா மாணவர் இயக்க மாநில துணைச் செயலாளர் சங்கர், சமூக ஆர்வலர்கள் நவநீதன், பெரியசாமி, பாசூர் முப்பாட்டுக்காரர் சுப்பிரமணி, மதகு பாசன சபை உறுப்பினர் ஜெகதீசன் மற்றும் அக்னி நிழல்கள், எஃப் சி எஃப் பவுண்டேஷன், கலா மாணவர் இயக்கம் உள்ளிட்டவைகள் இணைந்து காலிங்கராயன் வாய்க்கால் கரையில் 10,000 பனை விதைகளை நட்டு தொடங்கி வைத்தனர்.

பொன்னியின் சேவகன் அறக்கட்டளையின் சார்பில் பனை விதைகள் நடும் நிகழ்ச்சியை தொடர்ந்து நிகழ்ச்சிக்கு வருகை புரிந்தவர்களுக்கு மரக்கன்றுகளை வழங்கினார்.

நிகழ்ச்சியில் ஞானசேகரன், ஹரீஸ், குமரேசன், கபிலேஷ், பிரபு, லோகநாதன், அக்னி நிகழ்கள் அறக்கட்டளை ஒருங்கிணைப்பாளர் ராஜவேல், எப்சிஎப் பவுண்டேசன் பொருளாளர் பூபதி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News