வீடியோ கேமராவுடன் சுற்றும் தேர்தல் அதிகாரிகள்

Update: 2021-03-23 05:30 GMT

ஈரோடு மாவட்டத்தில் வீடியோ கேமராவுடன் தொகுதிகளை தேர்தல் அதிகாரிகள் சுற்றி வருகின்றனர்.

தமிழக சட்டமன்றத்திற்கு வரும் ஏப்ரல் 6-ஆம் தேதி தேர்தல் நடைபெற உள்ள நிலையில் ஈரோடு மாவட்டத்தை பொறுத்தவரை 8 சட்டமன்ற தொகுதிகளில் பொதுமக்கள் வாக்களிக்க வசதியாக 2741 வாக்குச்சாவடி மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. இதையடுத்து பறக்கும்படை, நிலை கண்காணிப்பு குழு ,வீடியோ கண்காணிப்பு குழு அமைக்கப்பட்டு அவர்கள் 24 மணிநேரமும் சுழற்சி முறையில் வேலை செய்து வருகின்றனர். பொதுமக்களுக்கு பணம், பரிசு பொருட்கள் விநியோகிக்கப்படுகிறதா என்பது குறித்தும் தீவிரமாக கண்காணித்து வருகின்றனர்.

மேலும் உரிய ஆவணங்களின்றி ரூ. 50 ஆயிரத்துக்கு மேல் கொண்டு செல்லப்படும் பணத்தை பறிமுதல் செய்து வருகின்றனர். மேலும் சேலை, மதுபான வகைகளை கொண்டு சென்றதால் அதை தடுக்கும் பணியையும் செய்து வருகின்றனர். இதேபோல் வங்கியில் ரூ .10 லட்சத்திற்கும் மேல் பண பரிவர்த்தனை நடைபெறுவதையும் அதிகாரிகள் தீவிரமாக கண்காணித்து வருகின்றனர். மேலும் அரசியல் கட்சிகளின் பொதுக்கூட்டம் பிரச்சாரம் ஆகியவற்றையும் அதிகாரிகள் தீவிரமாக கண்காணித்து வருகின்றனர்.

Tags:    

Similar News