திமுக வேட்பாளர் உறவினர் வீட்டில் அதிரடி சோதனை
மொடக்குறிச்சி தொகுதி திமுக வேட்பாளர் சுப்புலட்சுமி ஜெகதீசன் உறவினர் வீட்டில் நள்ளிரவில் தேர்தல் பறக்கும் படை சோதனை.;
ஈரோடு மாவட்டத்தில் பொதுமக்களுக்கு பணம் பரிசுப் பொருட்கள் கொண்டு செல்லப் படுகிறதா? என்பதை கண்காணிக்கும் வகையிலும், ரூ .50 ஆயிரத்துக்கு மேல் உரிய ஆவணங்களின்றி பணம் கொண்டு செல்லப்படுகிறதா? என்பதை கண்காணிக்கும் வகையிலும் மாவட்டம் முழுவதும் 24 மணி நேரமும் சுழற்சி முறையில் தேர்தல் பறக்கும் படையினர், நிலை கண்காணிப்பு குழுவினர், வீடியோ குழுவினர் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்நிலையில் ஈரோடு மாவட்டம் மொடக்குறிச்சி தொகுதியில் போட்டியிடும் திமுக வேட்பாளரும் திமுக துணை பொது செயலாளருமான சுப்புலட்சுமி ஜெகதீசன் வாக்களர்களுக்கு பணம் கொடுப்பதற்காக இவரது தம்பி வீட்டில் பணம் பதுக்கி வைத்திருப்பதாக தேர்தல் பறக்கும் படையினருக்கு தகவல் கிடைத்துள்ளது. இதனையடுத்து நள்ளிரவில் சுப்புலட்சுமி செகதீசனின் தம்பியான சின்னம்மாபுரத்தை சேரந்த துரைசாமி என்பவரது வீட்டில் தேர்தல் பறக்கும் படையினர் சோதனை நடத்தினர். சுமார் அதிகாலை 2.30 மணி வரை நடைபெற்ற சோதனையில் எதுவும் கிடைக்காததால் பறக்கும் படையினர் திரும்பி சென்றனர்.